Breaking News

இந்­தியா புலி­க­ளுக்கு நிதி வழங்­கி­ய­தாக பாகிஸ்தான் செனட் சபையில் குற்­றச்­சாட்டு

யுத்தம் இடம்­பெற்ற காலத்தில் இந்­தியா, தமி­ழீழ விடு­தலைப் புலி­க­ளுக்கு நிதி உதவி வழங்­கி­ய­தாக பாகிஸ்தான் செனட்­ச­பையில் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

பாகிஸ்தான் தொடர்பில் இந்­திய அர­சாங்கம் வெளி­யிட்ட அறிக்­கை­க­ளுக்கு கடு­மை­யாக கண்­டனம் தெரி­விக்கும் வகையில் நேற்று முன்தினம் செனட்­ச­பையில் தீர்­மா­ன­மொன்று நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

இந்­தி­யாவின் இவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என செனட்­ச­பையின் தலைவர் ராஜா மொஹ் முட் சபார் உல் ஹக் இந்த தீர்­மா­னத்தை முன்­வைத்­தி­ருந்தார். இந்­தி­யாவின் இவ் மேலா­திக்க மனப்­போக்கை பாகிஸ்தான் நிரா­க­ரித்­துள்­ள­தாக பாகிஸ்தான் ஊட­க­மொன்று செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

இந்­திய தலைமை அறிக்­கை­க­ளுக்கு எதி­ராக நடந்த விவா­தத்தின் போது இந்­தியா எல்லைத் தாண்­டிய பயங்­க­ர­வா­தத்தை ஊக்­கு­வித்­தது என செனட்­ச­பையின் தலை வர் ராஜா மொஹ்முட் சபார் உல் ஹக் குற்றம் சுமத்­தி­யுள்ளார். இலங்­கையின் ஸ்திரத்­தன்­மையை சீர்­கு­லைக்கும் வகையில் இந்­தியா, தமி­ழீழ விடு­தலைப் புலி­க­ளுக்கு நிதி உத­வி­களை வழங்­கி­ய­தாக அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

குஜ­ராத்தில் 2000 முஸ்­லிம்கள் படு­கொலை செய்­யப்­பட்­ட­தா­கவும், இது குறித்து இந்­தியப் பிர­தமர் நரேந்திர மோடி எவ்­வித அனு­தா­பமும் வெளி­யி­ட­வில்லை என அவர் கூறி­யுள்ளார். பாகிஸ்தான் சார்க் மற்றும் பிற சர்­வ­தேச அமைப்­புக்­களை அணுகி இந்­தி­யாவின் தலை­மைத்­து­வத்தை பற்றி அம்­ப­லப்­ப டுத்த வேண்டும். இந்­தியா பொறுப்­பற்ற மாநிலம் என இதன் ஊடாக நிரூ­பித்­துள்­ளது.

சர்­வ­தேச சமூகம் மோடியின் ஆத்­தி­ர­மூட்டும் அறிக்கை தொடர்பில் கவ­னத்­திற்கு எடுத்­துக்­கொள்ள வேண்டும் என சையத் முசாபர் ஹுசைன் ஷா வலி­யு­றுத்­தி­யுள்ளார். இந்­தி­ய-­ பா­கிஸ்தான் உற­வுகள் சம நிலையில் நிறு­வப்­பட்­ட­தாக அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். ஆயுதப் படைகள், உள்­துறை அமைச்­சகம் மற்றும் இந்­தியா அறிக்­கைக்கு கண்­டனம் தெரி­வித்த பாது­காப்பு அமைச்­சிற்கு அவர் பாராட்­டி­யுள்ளார்.

இதே­வேளை, சையத் முசாபர் ஹுசைன் ஷா பாகிஸ்தான் அமை­தி­யான நாடு எனவும் எந்தவொரு தரப்பு மீதும் கோபப்படப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். தீவிரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக பாகி ஸ்தான் பதில் தாக்குதல் நடத்தலாம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.