மஹிந்தவை விவாதத்திற்கு வருமாறு ரவி அழைப்பு
நாட்டின் பொருளாதார பின்னடைவு குறித்து விவாதிக்க வருமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த 12 வருடகாலமாக பொருளாதாரத்திற்கு பொறுப்பாக இருந்தவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச. அதனால் பந்துலவின் சவாலை மஹிந்த ராஜபக்சவிற்கு முன்வைப்பதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்த தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கடந்த 2005ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 05ஆம் திகதி நாட்டின் முழு கடன் தொகை 1754 பில்லியன் ஆகும். ஆனால் அதன் இன்றைய பெறுமதியில் 8975 பில்லியனாக கடனை உயர்த்தி அற்புதமான நாடாக ஒப்படைத்துள்ளனர்.
பந்துல குணவர்தன நாட்டில் பொருளாதாரம் விழுந்து போய் காணப்படுவதாக அவருடன் விவாதத்திற்கு வருமாறும் சவால் விடுத்திருந்தார். இது தொடர்பில் விவாதத்திற்கு பந்துல குணவர்தன அல்ல முன்னாள் ஜனாதிபதியே வர வேண்டும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தன்னுடன் இது தொடர்பில் விவாதத்திற்கு வருமாறு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.