Breaking News

ஜெ.க்கு எதிராக ஜுலை முதல் வாரத்தில் மேன்முறையீடு

முதல்வர் ஜெய­ல­லிதா விடு­த­லையை எதிர்த்து உச்­ச­நீ­தி­மன்­றத்தில் ஜுலை முதல் வாரத்தில் மேன்­மு­றை­யீடு செய்ய உள்­ள­தாக, அம்­மா­நில அர­ச­த­ரப்பு சட்­டத்­த­ரணி ஆச்­சார்யா தெரி­வித்­துள்ளார்.

ஆச்­சார்யா இது தொடர்பில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது, மேன்­மு­றை­யீட்டு மனுவை தயா­ரிக்கும் பணியில் ஈடு­பட்­டுள்ளேன். இதற்கு ஒரு­வா­ரத்­திற்கு மேலாகும். ஜெய­ல­லிதா விடு­தலை செய்­யப்­பட்ட தீர்ப்பில் பல்­வேறு தவ­றுகள் உள்­ளன. அவற்றை சுட்­டிக்­காட்டி உள்ளேன். 

தற்­போது உச்­ச­நீ­தி­மன்­றத்­திற்கு விடு­முறை என்­பதால், விடு­முறை கால நீதி­ப­தி­க­ளிடம் மேன்­மு­றை­யீட்டு மனுவை தாக்கல் செய்­வதில் சிக்கல் உள்­ளது. எனவே, ஜுலையில் நீதி­மன்ற விடு­முறை முடி­வுற்ற முதல் வாரத்தில் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும் என்றார்.