Breaking News

பிரே­ர­ணையை தோற்­க­டிப்போம்! ஐ.தே.க., கூட்­ட­மைப்பு, ஸ்ரீல.மு.கா. சூளுரை

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ராக ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி சமர்ப்­பித்­துள்­ள நம்­பிக்கையில்லா பிரே­ர­ணை­யை தோற்­க­டிப்போம் என ஐக்­கிய தேசியக் கட்சி, மக்கள் விடு­தலை முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு மற்றும் சிறி­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் ஆகிய கட்­சிகள் சூளு­ரைத்­துள்­ளன.

பிர­த­ம­ருக்கு எதிராக கொண்­டு­வ­ரப்­படும் நம்­பிக்கையில்லா பிரே­ர­ணையை ஆத­ரிக்கப் போவ­தில்லை என்றும் அதனை தோற்­க­டிக்க அனைத்து செயற்­பா­டு­க­ளையும் முன்­னெ­டுப்­ப­தா­கவும் இந்தக் கட்­சிகள் குறிப்­பிட்­டுள்­ளன. பிர­தமர் ரணி­லுக்கு எதி­ராக நம்­பிக்கையில்லா பிரேர­ணை ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் 112 உறுப்­பி­னர்கள் கைச்­சாத்­திட்டு சமர்ப்­பித்­து­ள்­ள நிலையில் அது தொடர்பில் வின­வி­ய­போதே இந்தகட் சி­களின் பிர­தி­நிதிகள் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டனர்.

ஐக்­கிய தேசிய கட்சி

ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அஜித் பி பெரேரா இது தொடர்பில் கூறு­கையில்,

பிர­த­ம­ருக்கு எதி­ராக கொண்­டு­வரும் நம்­பிக்கை இல்லா பிரே­ர­ணையை ஒரு போதும் அனு­ம­திக்கப் போவ­தில்லை. பிரே­ரணை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்டால் அதை தோற்­க­டிப்போம். பாரா­ளு­மன்­றத்தில் தற்­போது எமக்கே பலம் உள்­ளது. இவ்­வா­றான நிலையில் பிர­த­ம­ருக்கு எதி­ராக நம்­பிக்கை இல்லா பிரே­ரணை கொண்­டு­வந்­தாலும் அதை எதிர்த்து வாக்­க­ளிக்கும் உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை அதி­க­மாக உள்­ளது. ஆகவே நம்­பிக்கை இல்லா பிரே­ரணை கொண்டு வந்தால் அதை நாம் தோற்­க­டிப்போம்.

அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி தேர்­த­லுக்கு தயா­ராக இருந்தால் பாரா­ளு­மன்­றத்தை கலைத்து உட­ன­டி­யாக தேர்­த­லுக்கு செல்ல முடியும். ஆனால் இன்று மஹிந்த கூட்­ட­ணியே தேர்­த­லுக்கு பயந்­து­விட்­டது. இவர்கள் பிர­தமர் ரணி­லுக்கு எதி­ராக செயற்­பட்­டாலும் அல்­லது எமக்கு சேறு பூசும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டாலும் பொதுத் தேர்­தலின் பின்­னரும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் அர­சாங்­கமே அமையும். மக்­களின் பெரும்­பான்மை ஆத­ர­வுடன் மீண்டும் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிர­த­ம­ராவார் எனக் குறிப்­பிட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு,

இந்­நி­லையில் பிர­த­ம­ருக்கு எதி­ராக கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள நம்­பிக்கை இல்லா பிரே­ரணை தொடர்பில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் நிலைப்­பாட்­டினை வின­வி­ய­போது கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன் பதி­ல­ளிக்­கையில்,

பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்கை இல்லா பிரே­ரணை கொண்­டு­வ­ரு­வது என்­பது சாத்­தி­ய­மற்­ற­தாகும். இதற்கு முன்னர் பல சந்­தர்ப்­பங்­களில் பாரா­ளு­மன்றம் கூடிய போதும் பிர­த­ம­ருக்கு எதி­ராக நம்­பிக்கை இல்லா தீர்­மானம் கொண்­டு­வ­ரு­வது தொடர்பில் இவர்கள் தெரி­வித்­தனர். ஆனால் ஒரு சந்­தர்ப்­பத்­தி­லேனும் அதை நிறை­வேற்ற முடி­ய­வில்லை. ஆகவே இனி­மேலும் பிர­த­ம­ருக்கு எதி­ராக நம்­பிக்கை இல்லா பிரே­ரணை கொண்டு வரும் சாத்­தியம் இல்லை. அவ்­வா­றான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­மாயின் அந்த சந்­தர்ப்­பத்தில் நாம் தீர்­மானம் எடுப்போம். என்­னினும் இப்­போது நம்­பிக்கை இல்லா தீர்­மா­னத்தை ஆத­ரிக்கும் எண்ணம் இல்லை எனக் குறிப்­பிட்டார்.

முஸ்லிம் காங்­கிரஸ்

இது தொடர்பில் முஸ்லிம் காங்­கி­ரஸின் பொதுச் செய­லாளர் ஹசன் அலி தெரி­விக்­கையில்,

பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்கை இல்லா பிரே­ர­ணைக்கு நாம் ஒரு­போதும் ஆத­ரவு தெரி­விக்க மாட்டோம். ஒரு தனி மனி­தனை பழி­வாங்­கவே இவ்­வா­றான பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­ப­டு­கின்­றதே தவிர இதனால் நாட்­டுக்கு எந்த பயனும் இல்லை. ஆகவே இந்த நம்­பிக்கை இல்லா பிரே­ர­ணையை நிரா­க­ரிக்க வேண்டும். மேலும் இப்­போது நடை­மு­றையில் இருக்கும் பாரா­ளு­மன்­ற­மா­னது ஐந்து வரு­டங்­க­ளுக்கு முன்னர் நிய­மிக்­கப்­பட்­ட­தாகும். ஆனால் கடந்த ஜனா­தி­பதி தேர்­தலின் போது இதில் பலரை மக்கள் நிரா­க­ரித்து விட்­டனர். மக்கள் இப்­போது தமக்­கான புதிய தலை­வர்­களை நிய­மித்­துள்­ளனர். ஆகவே பிர­த­ம­ருக்கு எதி­ராக நம்­பிக்கை இல்லா பிரே­ர­ணையை கொண்­டு­வர ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் எவ­ருக்கும் அரு­கதை இல்லை. எனவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்கை இல்லா பிரே­ர­ணையை ஒரு­போதும் ஆத­ரிக்­காது என்றார்.

ஜே.வி.பி

மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பொதுச் செய­லாளர் ரில்வின் சில்வா குறிப்­பி­டு­கையில்,

கடந்த காலத்தில் பல சந்­தர்ப்­பங்­களில் எதிர்க்­கட்­சியால் நம்­பிக்கை இல்லா பிரே­ர­ணையை கொண்­டு­வ­ரு­வ­தாக தெரி­வித்­தனர். ஆனால் இன்­று­வரை ஒன்­றை­யேனும் இவர்கள் கொண்­டு­வ­ர­வில்லை. தமது அர­சியல் சுய­ந­லத்­துக்­காக ஒரு­சிலர் சவால் விடுவதை நாம் பெரிதுபடுத்தவும் இல்லை. மேலும் அடுத்த ஒரு சில வாரங்களில் பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். அவ்வாறு கலைக்கப்படுமாயின் இவ்வாறான நம்பிக்கை இல்லா பிரேரணைகள் எவையும் அவசியப்படாது. 

எனவே பிரதமர் ரணிலுக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவந்தால் அந்த சந்தர்ப்பத்தில் நாம் தீர்மானம் எடுப்போம். பிரேரணையை ஆதரிப்பதா அல்லது நிராகரிப்பதா என்பது தொடர்பில் இப்போது எந்த தீர்மானமும் இல்லை எனக் குறிப்பிட்டார்.