அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஹிலாரிக்கு ஆதரவு தெரிவிக்கிறது ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு
அடுத்த ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடத் திட்டமிட்டுள்ள அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்டனுக்கு ஆதரவு தெரிவித்து, ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
2016ம் ஆண்டு நடக்கவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் ஹிலாரி கிளின்டன் போட்டியிடத் திட்டமிட்டுள்ளார். இந்தநிலையில், அவருக்கான ஆதரவை உறுதிப்படுத்தி அமெரிக்காவில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்களின் அமைப்பான ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு கடிதம் ஒன்றை கடந்த மாதம் 30ம் நாள் ஹிலாரிக்கு அனுப்பி வைத்துள்ளது.
இதில், ஏற்கனவே 2008ம் ஆண்டு அதிபர் தேர்தலின் போது, அவருக்கு ஆதரவு வெளியிட்டதை நினைவுபடுத்தப்பட்டுள்ளதுடன், அந்த ஆதரவு தொடரும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.