பிரதமராக வேண்டும் என்ற கனவு எனக்கில்லை! ஆனால் நான் தகுதியானவன் - நிமால்
பிரதமர் ஆகவேண்டும் என்ற கனவு எனக்கு ஒருபோதும் இருக்கவில்லை. ஆனால் பிரதமர் ஆவதற்கான அனைத்து தகுதிகளும் எனக்கு உள்ளன என எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார். கட்சியை பலப்படுத்தி எமது அரசாங்கத்தை அமைப்பதே எமது நோக்கமாகும். பிரதமர் வேட்பாளராக யாரை நியமித்தாலும் அவர்களின் வெற்றிக்காக உதவத் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் நேற்று ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் வேட்பாளராவதற்கான எண்ணம் உள்ளதா என வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதமர் வேட்பாளராக வேண்டும் என்ற எண்ணம் இதுவரையில் எனக்கு வரவில்லை. ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் சஜித் என்னை விமர்சிக்கின்றார். பிரதமருக்கான ஆடைகளை தைப்பதாக வும், நான் பிரதமர் வேட்பாளராக களமிறங்கத் தயாராவதாகவும் விமர்சிக்கின்றார். ஆனால் உண்மையிலேயே பிரதமராக வரவேண்டும் என்று சஜித் தான் கனவு காண்கின்றார்.
எனக்கு தையல்காரராக சஜித் வர விரும்பினால் அதற்கு நான் தடையாக இருக்கமாட்டேன். ஆனால் இன்று பிரதமராக வர ஆசைப்படும் நபர்களை விடவும் நான் தகுதியானவன். சஜித்தை விடவும் எனக்கு பலமடங்கு தகுதிகள் உள்ளன. இலங்கைக்கான சர்வதேச பிரதிநிதியாக செயற்பட்டவன், படித்தவன், பல தலைமைத்துவ பொறுப்புக்களை ஏற்று நடந்தவன் என்ற வகையில் எனக்கு பிரதமர் ஆவதற்கான தகுதிகள் உள்ளன என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம்.
அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தகுதியான நபரையே களமிறக்குவோம். எமக்கு தேவைப்படுவது அடுத்த பாராளு மன்றம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சி யின் பலத்துடன் அமைய வேண்டும் என்ப துவே. அதற்கான சகல நடவடிக்கைகளை யும் நம் முன்னெடுத்து வருகின்றோம்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை தகர்ப்பதே எமது பிரதான இலக்காகும். இன்று எமக்கு இருக்கும் பிரதான எதிரி யும் ஐக்கிய தேசியக் கட்சியேயாகும். நாம் தேசிய அரசாங்கமாக செயற்பட எந்த வொரு சந்தர்ப்பத்திலும் தயாராக இல்லை. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி தமது இரு ப்பை தக்கவைப்பதற்காக தேசிய அரசாங் கம் அவசியம் என்ற கருத்தினை பரப்புகின்றது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலை நடத்தினால் அதன் பின்னர் அமையும் அரசாங்கம் தனிக் கட்சி அரசாங்கமாகவே அமைய வேண்டும். மீண்டும் தேசிய அரசாங்கத்தை அமைக்க நாம் இடமளிக்க மாட்டோம்.
நம்பிக்கையில்லா பிரேரணை
அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர் ரவி கருணாநாயக்க வுக்கு எதிராக இந்த பாராளுமன்ற அமர் விலேயே நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வரவே நாம் தீர்மானித்துள்ளோம். அதற்கான சகல நடவடிக்கைகளையும் நாம் எடுத்துள்ளோம். அதேபோல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரும் திட்டம் சற்று கால தாமதமாகலாம். அதற்கான முயற்சிகளை நாம் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றோம்.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு எம்மிடம் உள்ளது. இது வரையில் 112 பேர் நம்பிக்கையில்லா பிரேரணையில் கைச்சாத்திட்டுள்ளனர். இருவர் சிறைச்சாலையில் உள்ளனர், மேலும் இருவர் வைத்தியசாலையில் உள்ளனர். ஆகவே அந்த நான்கு பேரின் கையொப்பங்களை பெற்றுக் கொண்ட பின்னர் எமது பிரதமருக்கு எதிரான நம்பி க்கையில்லாப் பிரேரணையை முன்வைக்க முடியும் எனக் குறிப்பிட்டார்.