Breaking News

எம்மை அழிக்க கட்­ட­மைக்­கப்­பட்டோரின் விளை­வு­களே சமூக விரோத சம்­ப­வங்கள் - சி.சிறிதரன்

தமிழ் மக்கள் வாழும் பகு­தி­களில் நடை­பெற்­று­வரும் கொடு­ர­மா­னதும் அரு­வ­ருக்கத் தக்­க­து­மான சமுக விரோத சம்­ப­வங்கள் போரின்­பின்னர் எமது மக்கள் மீது கட்­ட­விழ்த்து விடப்­பட்ட கட்­ட­மைக்­கப்­பட்ட போரின் விளை­வு­க­ளா­கவே காணப்­ப­டு­கின்­றது.

எமது மக்­களின் மனோ­நிலை பண்­பாடு என்­பன சிதைக்­கப்­பட்டு இன அடை­யா­ளங்கள் அற்ற நிலையில் வாழ விடு­வதே ஆக்­கி­ர­மிப்­பா­ளர்­களின் நோக்­க­மாக இருக்­கின்­றது என யாழ் .மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சி.சிறிதரன் தெரி­வித்­துள்ளார். கருத்­தாடல் நிகழ்­வொன்றில் கருத்து வெளியி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

ஒரு தேசத்­தையோ அல்­லது ஒரு இனத்­தையோ வரை­ய­றுக்­கப்­பட்ட ஒரு நட­வ­டிக்கை மூலம் அழித்து விட­மு­டி­யாது. ஆதலால், ஆக்­கி­ர­மிப்­பா­ளர்கள் ஒரு நீண்­ட­கால திட்­டத்தின் அடிப்­ப­டையில், பல்­வேறு நகர்­வு­களை கட்டம் கட்­ட­மாக முன்­னெ­டுப்பர். இவை நேர­டி­யா­கவும் மறை­மு­க­மா­கவும் கட்­ட­மைப்பு சார் அடிப்­ப­டையில் இடம்­பெ­று­வ­தற்­கான சாத்­தி­யங்கள் அதி­க­முண்டு. நேர­டி­யான நகர்­வுகள் இலக்­கு­வைக்­கப்­பட்ட சமூ­கத்தை உட­ன­டி­யாக உலுப்பும். மறை­மு­க­மா­னதும் கட்­ட­மைக்­கப்­பட்­ட­து­மான நட­வ­டிக்­கைகள் நீண்­ட­கா­லத்தில் குறித்த தேசத்தை, இனத்தை நிர்­மூ­ல­மாக்கும்.

இன­அ­ழிப்­பையும் தொடர் விளை­வு­க­ளையும் ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­யது தனித்த நேர­டி­யான ஆயுதப் போர் மட்­டு­மல்ல. மாறாக, ஒரு இனத்தின் சமூக கட்­ட­மைப்பை, அதன் பண்­பாட்டை, அடை­யா­ளத்தை மற்றும் பொருண்­மி­யத்தை பல்­வேறு வழி­வ­கை­களில் பல­வீ­னப்­ப­டுத்தி இறு­தியில் பேர­ழிவை உண்­டு­பண்­ணு­வதே இன­அ­ழிப்பின் நீண்­ட­கால திட்­ட­மி­டலின் அடிப்­படை.

முள்­ளி­வாய்க்­காலில் எமது தேசம் சந்­தித்த இன­அ­ழிப்­போடு எம் மீதான இன­அ­ழிப்பை இலங்கை அர­சாங்கம் முடி­வுக்கு கொண்­டு­வ­ர­வில்லை. கூட்­டு­ம­னோ­திடம் உடைக்­கப்­பட்டு, சமூக கட்­ட­மைப்­புகள் சிதை­வ­டைந்து, பொரு­ளா­தாரம் கடு­மை­யாகப் பாதிக்­கப்­பட்டு, ஒரு இனத்தின் இருப்­புக்­கான அத்­தனை அம்­சங்­களும் ஆட்டம் கண்­டி­ருந்த எமது தேசத்­துக்கு எதி­ராக உட­ன­டி­யாக கட்­ட­மைப்­புசார் இன அழிப்பை இலங்கை ஆட்­சி­பீடம் தீவி­ர­மாக முடுக்­கி­விட்­டது.

வித்­தி­யா­விற்கு நீதி வேண்டி நடந்த போராட்­டத்­துக்கு பங்கம் விளை­வித்து, வன்­முறைக் கலா­சா­ரத்தை கட்­ட­விழ்த்­து­விட்­டதன் பின்­ன­ணியில் மூன்று துணை இரா­ணு­வக்­கு­ழுக்கள் இருந்­துள்­ள­தாக அறிய முடி­கி­றது. இந்த மூன்று தரப்­பு­க­ளையும் நேர்த்தியாக கட்­ட­மைக்­கப்­பட்ட ஒரு துறையே வழி­ந­டத்­தி­ய­தாக எமக்கு கிடைக்கும் தக­வல்கள் தெரிவிக்­கின்­றன. குறித்­த­துறை இலங்கை அர­சாங்­கத்தின் அனு­ம­தி­யின்றி செயற்­ப­ட­மு­டி­யாது என்­ப­தையும் நாம் அறிவோம். இந்­தத்­து­றையே கடந்த காலங்­களில் தமிழ் இளை­ஞர்கள், யுவ­தி­களை படு­கொலை செய்­தமை, கடத்தல் காணாமல் போதல்­களின் பின்­ன­ணியில் இருந்து செயற்­பட்­டமை பலரும் அறிந்­ததே.

தமிழர் தாயகப் பகு­தியை ஆக்­கி­ர­மித்­துள்ள இலங்கை இரா­ணு­வத்தை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்­கைகள் வலுப்­பெற்­றுள்ள பின்­ன­ணி­யி­லேயே, காவற்­று­றையால் கட்­டுப்­ப­டுத்த முடி­யாத அள­வுக்கு வன்­மு­றைகள் வெடித்­துள்­ளது. ஆதலால், நிலை­மையை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டுவரும் முகமாக இராணுவத்தையும் விசேட அதிரடிப்படையையும் நடவடிக்கையில் ஈடுபடுத்த வேண்டும் என்ற மாயை உருவாக்கப்பட்டது. இது இராணுவத்தை எந்தவொரு காரணம் கொண்டும் வெளியேற்ற மாட்டோம் என்று கூறிவருகின்ற தரப்புகளின் வாதத்தை பலப்படுத்துவதற்கான ஒரு நகர்வாக பார்க்கப்பட வேண்டும். இதனூடாக தொடர்ந்தும் தமிழர் தாயகத்தில் இராணுவ ஆக்கிரமிப்பைப் பேணுவதே நோக்க மாகவுள்ளது என்றார்.