Breaking News

ரணில் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை பயனற்றது என்கிறார் லக்ஷ்மன் கிரியெல்ல

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதிரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையா ­னது பய­னற்­றது. எனவே, இன்னும் ஓரிரு தினங்­களில் பாரா­ளு­மன்றம் கலைக்­கப்படும் என ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிர தம கொர­டாவும் பெருந்­தோட்டத் துறை அமைச்­ச­ரு­மான லக்ஷ்மன் கிரி­யெல்ல

தெரி­வித்தார். பாரா­ளு­மன்ற உறுப்பி­னர்கள் 112 பேர் கையெ­ழுத்திட்ட பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரேரணை பாரா­ளு­மன்ற செய­லாளர் நாயகம் தம்­மிக்க தச­நா­யக்­க­விடம் நேற்று முன்­தினம் சமர்­ப்பிக்­கப்­பட்­டது. இது

கு­றித்து கருத்துக் கேட்ட போதே அமைச்சர் இவ்­வாறு தெரி­வித்தார்.

பிர­த­ம­ருக்கு எதி­ராக சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணை­யா­னது இன்னும் பாரா­ளு­மன்ற ஒழுங்குப் பத்­தி­ரத்தில் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை. இவ்­வா­றான நிலை­யி­லேயே இன்னும் ஓரிரு தினங்­களில் பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­படும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அடுத்த பாரா­ளு­மன்ற அமர்­வா­னது எதிர்­வரும் ஒன்­பதாம் திகதி இடம்­பெறும். அதே­வேளை அதற்கு முன்­பாக எட்டாம் திக­தி­யான நாளை விசேட அமைச்­ச­ரவை கூட்­ட­மொன்று இடம்­பெ­ற­வுள்­ளது. இந்தக் கூட்­டத்தில் பாரா­ளு­மன்றக் கலைப்பு மற்றும் பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை போன்­றவை தொடர்பில் விரி­வாகக் கலந்­தா­லோ­சிக்­கப்­ப­டு­மென எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணை­யா­னது முதலில் பாரா­ளு­மன்ற ஒழுங்குப் பத்­தி­ரத்தில் உள்­ள­டக்­கப்­ப­ட­வேண்டும். அதற்கு பின்­னரே அப்­பி­ரே­ரணை விவா­தத்­துக்கு எடுத்­துக்­கொள்­வது பற்றி முடிவு எடுக்­கப்­படும். ஆனால் தற்­போ­தைய நிலை­வ­ரத்தின் படி இவ்­வா­றான செயற்­பா­டு­க­ளுக்கு முன்­ப­தா­கவே பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­படும் சாத்­தி­யக்­கூ­றுகள் காணப்­ப­டு­கின்­றன.

பிர­தமர் காரி­யா­லய தரப்­புக்­களின் தக­வல்­க­ளின்­படி எதிர்­வரும் 9ஆம் திகதி அல்­லது 10ஆம் திக­தி­களில் பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­ப­டு­மென தெரிய வரு­கி­றது. இதே­வேளை, பாரா­ளு­மன்­றத்தை கலைப்­ப­தற்கு சபா­நா­ய­கரும் பரிந்­து­ரைப்­பதால் பாரா­ளு­மன்றம் விரைவில் கலைக்­கப்­ப­டு­வது உறு­தி­யா­கி­யுள்­ளது.

ஐக்­கிய தேசியக் கட்சி, மக்கள் விடு­தலை முன்­னணி, தினேஷ் குண­வர்­தன தலை­மை­யி­லான மக்கள் ஐக்­கிய முன்­னணி, விமல் வீர­வன்ச தலை­மை­யி­லான தேசிய சுதந்­திர முன்­னணி, மஹிந்த ஆத­ரவு அணி உள்­ளிட்ட பெரும்­பா­லான கட்­சி­களும் சிவில் அமைப்­புக்­களும் உட­ன­டி­யாக பாரா­ளு­மன்­றத்தை கலைத்­து­விட்டு தேர்­தலை நடத்­து­மாறு வலி­யு­றுத்தி வரு­கின்­றன.

இதே­வேளை, 20ஆவது திருத்­தத்தை நிறை­வேற்­றிய பின்­னரே பாரா­ளு­மன்­றத்தை கலைக்­க­வேண்டும் என எதிர்­கட்சித் தலைவர் நிமால் சிறி­பா­லடி சில்வா, அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் சுகா­தார அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரத்ன மற்றும் அத்­து­ர­லிய ரத்­தின தேரர் ஆகியோர் வலி­யு­றுத்தி வரு­கின்­றனர்.

20ஆவது திருத்­தத்தை கொண்டு வரு­வ­தற்கு கால­தா­மதம் ஏற்­ப­டு­மாயின் அதற்­காகக் காத்­தி­ருக்­காமல் உட­ன­டி­யாக பாரா­ளு­மன்­றத்தை கலைத்து தேர்­த­லுக்கு செல்ல வேண்டும் என மக்கள் விடு­தலை முன்­னணி தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி வரு­வ­துடன், தேர்­தலை இலக்கு வைத்து நாட­ளா­விய ரீதியில் பல்­வேறு வேலைத்­திட்­டங்­க­ளையும் மக்­களை தெளி­வு­ப­டுத்தும் செயற்­பா­டு­க­ளையும் முன்­னெ­டுத்து வரு­கி­றது.

இதே­வேளை, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் குறிப்­பாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆத­ரவு அணியும் கூட தேர்­தலை எதிர்­கொள்­வ­தற்­கான முன்­னேற்­பா­டு­களை நாட­ளா­விய ரீதியில் முன்­னெ­டுத்து வரு­கின்­றன.

பிர­தான கட்­சிகள் உள்­ளிட்ட சில கட்சிகள் வேட்பாளர் தெரிவுக்கான விண்ணப்பங்களை கோரியுள்ளதுடன் நேர்முகப்பரீட்சைகளையும் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

20ஆவது திருத்தம் தொடர்பாக கட்சிகளிடையே ஏற்பட்டிருக்கும் சர்ச்சை குறித்து ஆராய்ந்து முடிவொன்றை எட்டுவதற்கான முக்கிய கலந்துரையாடல்கள் நாளை மற்றும் நாளை மறுதினம் ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.