Breaking News

ஐ.நா விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் ஜெனிவா கூட்டத்தொடரில் மைத்திரியும் பங்கேற்கிறார்

இலங்கை தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ள, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் செப்ரெம்பர் மாத அமர்வில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்து கொள்ளவுள்ளார்.

நேற்று முன்தினம் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுடன் நடத்திய தொலைபேசி உரையாடலின் போதே, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வருரும் செப்ரெபம்பரில் நடைபெறவுள்ள ஜெனிவா கூட்டத்தொடரில் பங்கேற்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளாளர்.

இலங்கையில் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர், தாம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்க விரும்புவதாக மைத்திரிபால சிறிசேன, ஐ.நா பொதுச்செயலரிடம் குறிப்பிட்டதாக ஜனாதிபதி செயலகம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் வரும் செப்ரெம்பர் மாத அமர்வில், இலங்கை தொடர்பான ஐ.நா விசாரணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்படும் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட்ராட் அல் ஹூசேன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.