Breaking News

யாழில் மணல் அகழ்விற்கு விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு விரைவில் நீக்க நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் மணல் அகழ்விற்கு விதிக்கப் பட்டுள்ள தடை உத்தரவு விரைவில் தளர்த்தப்படும் என மகாவலி மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சு தெரிவிக்கின்றது.

யாழ்ப்பாணத்தில் மணல் வளம் செறிந்துள்ள பகுதிகளில் மத்திய சுற்றாடல் அதிகாரசபையினூடாக ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க குறிப்பிடுகின்றார்.ஆய்வுகள் நிறைவடைத்ததன் பின்னர் தற்போது மணல் அகழ்விற்கு விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் யாழில் மணல் அகழ்விற்கு விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவை நீக்குமாறுயாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் நிஹால் ரூபசிங்கதெரிவித்துள்ளார்.அதற்கமைய யாழ். குடாநாட்டில் சிறிய அளவில் மணல் அகழ்வு மேற்கொள்ளப்படும்இடங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது தொடர்பில் ஆராய்ந்துப்பார்ப்பதாகவும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க மேலும் சுட்டிக்காட்டுகின்றார்.