Breaking News

தொடர்ந்தும் முதலிடத்தில் சங்கா

ஐ.சி.சி டெஸ்ட் போட்­டியின் அடிப்­ப­டையில் வீரர்­களின் பட்­டி­யலை வெளி­யிட்­டுள்­ளது. துடுப்­பாட்ட வீரர்கள் தர­வ­ரி­சையில் இலங்கை அணியின் நட்­சத்­திரத் துடுப்­பாட்ட வீரர் குமார் சங்­கக்­கார முதலிடத்தில் இருக்­கிறார். ஐந்­தா­வது இடத்தில் இலங்கை அணித் தலைவர் அஞ்­சலோ மெத்­தியூஸ் இருக்­கிறார்.

சங்­கக்­கார 909 புள்­ளிகள் பெற்று தொடர்ந்து முதல் இடத்தில் உள் ளார். தென்­னா­பி­ரிக்­காவின் டிவில்­லியர்ஸ், ஹசிம் அம்லா 2ஆவது, 3ஆவது இடங்­களில் உள்­ளனர். சுமித் (அவுஸ்­தி­ரே­லியா), மெத்­தியூஸ் (இலங்கை), யூனுஸ்கான் (பாகிஸ்தான்), ஜோரூட் (இங்­கி­லாந்து), வில்­லி­யம்சன் (நியூ­ஸி­லாந்து), வோர்னர் (ஆஸி.) ஆகியோர் முறையே 4 முதல் 9ஆவது இடங்­களில் உள்­ளன.

பந்­து­வீச்சில் ஸ்டெய்ன் (தென்­னா­பி­ரிக்கா), ஆண்­டர்சன் (இங்­கி­லாந்து), ஹாரீஸ் (அவுஸ்­தி­ரே­லியா) ஆகியோர் முறையே முதல் 3 இடங்­களில் உள்­ளனர். தென்­னா­பி­ரிக்கா 130 புள்­ளி­க­ளுடன் தொடர்ந்து முதல் இடத்­திலும், அவுஸ்­தி­ரே­லியா 108 புள்­ளி­க­ளுடன் 2ஆவது இடத்­திலும் உள்­ளன. நியூ­ஸி­லாந்து, இங்­கி­லாந்து, பாகிஸ்தான், இலங்கை, மேற்­கிந்­தியத் தீவுகள் ஆகிய நாடுகள் முறையே 4 முதல் 8ஆவது இடங்­களில் உள்­ளன.

நாடு­களின் தர­வ­ரி­சைப்­பட்­டி­யலில் இந்­தியா 99 புள்­ளி பெற்று 3ஆவது இடத்தில் இருக்­கி­றது. பங்­க­ளா­தே­ஷிற்கு எதி­ரான ஒரே டெஸ்டை வென்றால் இந்­தியா ஒரு புள்­ளி கூடுதல் பெற்று அதே 3ஆவது இடத்தில் நீடிக்கும். ஒரு வேளை தோற்றால் 95 புள்­ளி­க­ளுடன் 7ஆவது இடத்

துக்கு பின்­தங்கும். சம­நி­லை யில் முடிந்தால் 2 புள்­ளி­களை இழக்கும். ஆனாலும் அதே 3ஆவது இடத்தில் நீடிக்கும். பங்­க­ளாதேஷ் 39 புள்­ளி­க­ளுடன் 9ஆவது இடத்தில் இருக்­கி­றது.

இந்­தி­யா­வுக்கு எதிரான தொடரில் விளை­யா டும் பங்­க­ளாதேஷ் வீரர்­களில் துடுப்­பாட்ட தர­வ­ரி­சையில் மொமி­னுல்ஹக் 24ஆவது இடத்­திலும், சகீப் அல் ஹசன் 28ஆவது இடத்­திலும், முஸ்­பிக்குர் ­ரி­சை யில் மொமி­னுல்ஹக் 24 ஆவது இடத்­திலும், சகீப்–அல்– ஹசன் 28ஆவது இடத்­திலும் உள்­ளனர்.