Breaking News

மீனவர் பிரச்சினைக்கு தீர்வுகாண பா.ஜ.க முயற்சிக்கிறது

பாக்.ஜலசந்தியில் தமிழக மீனவர்களின் உரிமை பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் பாரதிய ஜனதா கட்சி கவனம் செலுத்தி வருவதாக மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் தெரிவித் துள்ளார்.

இந்த பிரச்சினை தொடர்பில் கவனமாக ஆராய்ந்து உரிய நேரத்தில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.  இந்திய தமிழர் மீனவர்கள் குறித்த பிரச்சினையை பாரதிய ஜனதா கட்சி அவதானத்துடன் கையாண்டு வருவதாக அவர் கூறியுள்ளார். 

மீனவர்கள் பிரச்சினை குறித்து மீனவர்கள், இலங்கை மீனவர்கள், அமைச்சர்கள் மட்டப் பேச்சுவார்த்தை நடத்தியும் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். 

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜும் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக பாண்டிச்சேரியில் ஊடகவியலாளர்களை சந்தித்த பொன்.இராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.