தாளையடி பகுதியில் இருவர் கழுத்தறுத்து கொலை
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று – தாளையடி பகுதியில் நேற்று இரவு 9.30 அளவில் இரட்டைக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
40 வயது சிவபாாலம் மற்றும் அவருடைய மனைவியான 40 வயது சிவாயினி ஆகியோரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
கொலைச் சம்பவம் பற்றி உறவினர்கள் கூறியதாவது, சிவபாலன் மற்றும் சிவாயினி ஆகிய இருவரும் திருமணமாகி வாழ்ந்து வருகின்ற நிலையில் இவர்களுக்கு உதவியாக சிவாயினியின் தயாரும் வாழ்ந்து வருகின்றார்.
கணவர் மனைவிக்கு இடையியே தொடர்ச்சியாக நடைபெறும் குடும்பத் தகராறு வழமை போன்று நேற்று இரவு தகராறு உச்சத்தை அடைந்ததன் காரணமாக மரணம் இடம்பெற்றுள்ளது.
குறித்த தகராறில் கணவர் மனையினுடைய கழுத்தை கூரிய ஆயுதத்தினால் அறுத்ததாகவும், இதனை சிவாயினியுடைய தாயார் சென்று பார்த்த போது, சிவாயினி துடிதுடித்துக் கொண்டிருந்த நிலையில், தாயார் கத்திய சத்தத்தில் அயலவல்கள் சம்பவ இடத்திற்கு வந்திருந்தனர்.
இதனையடுத்து சிவாயினியுடைய கணவரும் கழுத்தை அறுத்த நிலையில், கிணற்றிற்குள் விழுந்து தற்கொலை செய்துகொண்டதாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும் குறித்த கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இருவரது சடலங்களும் தற்பொழுது சம்பவ இடத்திலே இருப்பதாகவும் மரண விசாரணைக்காக கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி பார்வையிட்ட பின்னரே மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.