Breaking News

ரவிராஜ் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டி மீட்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியை கண்டுபிடித்துள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளனர். 

முச்சக்கரவண்டி தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிரோஷா பெனாண்டோ குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு உத்தரவிட்டார். 

மேலும் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 5 சந்தேகநபர்களை எதிர்வரும் 19ம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தவிட்டுள்ளார்.