அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அடுத்த வாரம் முக்கிய பேச்சுவார்த்தை
278 அரசியல் கைதிகளை விடுவித்துக் கொள்வது தொடர்பில் முக்கியமான பேச்சுவார்த்தை ஒன்று அடுத்த வாரம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவை அடுத்த வாரம் சந்திக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நீண்டகாலமாக காரணம் இன்றி தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.அவர்களை துரிதமாக விடுவித்துக் கொள்ளும் பொருட்டு இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இந்த பேச்சுவார்த்தை கடந்த வாரம் நடைபெறவிருந்த போதும், தவிர்க்கமுடியாத சில காரணங்களால் அடுத்த வாரம் வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.