Breaking News

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றது – ரணில்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி அரசாங் கத்துடன் இணைந்து செயற்பட்டு வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித் துள்ளார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் தேசிய சுதந்திர தின நிகழ்வுகளிலும் பங்கேற்றிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கையின் சுதந்திர தினத்தையும், இராணுவத்தையும் ஏற்றுக் கொண்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு சில உறுப்பினர்கள் பாதகமான கருத்துக்களை வெளியிட்ட போதிலும், பாராளுமன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் சிறந்த புரிந்துணர்வு காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினர் பயன்படுத்திய காணிகளை பொதுமக்களுக்கு மீள அளிப்பதில் தொடர்ந்தும் நெருக்கடி நிலைமை நீடித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் படையினருக்கு காணிகள் அவசியமில்லை எனவும், காணிகளை உரிய சரியான உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.