பிணையில் வந்தார் பசில்
நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சுமார் ஒன்றரை மாத காலத்திற்கு மேல் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
அத்துடன், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் வைத்தியர் நிஹால் ஜயதிலக, திவிநெகும திணைக்கள பணிப்பாளர் ஆகியோருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு கோரிக்கை இன்று பரிசீலனைக்கு வந்தபோது சந்தேகநபர்களை 1 லட்சம் ரூபா சரீரப் பிணையிலும் தலா 10 லட்சம் ரூபா பெறுமதியான 4 ஆள் பிணைகளிலும் விடுதலை செய்யுமாறு நீதிபதி சரோஜினி குசலா வீரவர்த்தன உத்தரவிட்டார்.
பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வரும் கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.