Breaking News

ஒரு மில்லியன் தமிழர்களில் நீங்களும் ஒருவரா? இன்னமும் 2நாட்களே

இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை,
மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் ஆகியவற்றைச் செய்துள்ளவர்களை, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சிறிலங்காவை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துமாறு ஐ.நாவைக்கு கோரும் வகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் மில்லியன் (பத்து இலட்சம்) கையெழுத்தினை இலக்கு வைத்து தொடங்கப்பட்டுள்ள வேட்டையிலேயே ஐ.நா மனித உரிமைச்சபை முன்றலில் மக்கள் தங்களது ஆர்வத்தினை வெளிப்படுத்தியுள்ளனர். 

இன்றுவரை ஒன்பது இலட்சத்து ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் ஒப்பமிட்டுவிட்டனர். அதனைவிட வன் கொப்பியாக மேலும் பலலட்சம் பேர் ஒப்பமிட்டுவிட்டனர் இணையத்தில் இன்னமும் 50ஆயிரம் பேர் ஒப்பமிட்டால் இணைய ஒப்பம் மட்டும் 10இலட்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.



போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றுக்குப் முற்றிலும் எந்தப் பொறுப்பேற்பும் இல்லை என்பதால், சிறிலங்காவில் தற்போதைய சூழ்நிலை ஐ.நா.சாசனம் அத்தியாயம் 7 பிரிவு 39 இன் கீழ் ‘அமைதிக்கான அச்சுறுத்தல்’ தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையை உள்ளடக்கியதாக இருக்கிறது’ என்று இந்த கையொப்ப மனுவில் தெரிவிக்கப்படுகிறது. 





இந்த மனு தமிழ், சிங்களம், ஆங்கிலம், இந்தி, பிரெஞ்சு, உட்பட 15 மொழிகளில் தொடங்கப்பட்டுள்ள இக்கையெழுத்து இயக்கத்தில் www.tgte-icc.org குறித்த இந்த இணையத்தளத்தின் வழியே உலகெங்கும் உள்ளவர்கள் ஒப்பமிட்டுக் கொள்ளலாம்.