ரஜினிமுருகன் படம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!
வருத்தப்படாதவாலிபர்சங்கம் படத்தில் வேலையில்லாமல்
வெட்டியாகச் சுற்றும் இளைஞராக இருந்த சிவகார்த்திகேயனுக்கு இந்தப்படத்தில் வேலைசெய்யவேண்டும் என்று நினைக்கிற வேடமாம். இந்தப்படத்தின் கதை மதுரையில் நடக்கிற மாதிரி எடுத்திருக்கிறார்களாம்.
வெட்டியாகச் சுற்றும் இளைஞராக இருந்த சிவகார்த்திகேயனுக்கு இந்தப்படத்தில் வேலைசெய்யவேண்டும் என்று நினைக்கிற வேடமாம். இந்தப்படத்தின் கதை மதுரையில் நடக்கிற மாதிரி எடுத்திருக்கிறார்களாம்.
இந்தப்படத்தில் ராஜ்கிரண், சிவகார்த்திகேயனுக்குத் தாத்தாவாக நடிக்கிறார். மஞ்சப்பையில் வந்த விவரம் தெரியாத தாத்தா கிடையாது. இந்தப்படத்தில் அவர் ரொம்பவிவரமாம். ஒரு பெரிய குடும்பத்தின் மூத்தவர் என்பதால் அந்தக்குடும்பத்திலிருந்து வேலைக்காக வெளிநாடு போனவர்கள் எல்லாம் ஆண்ட்ராய்டுபோன், ஐபேட் உட்பட நவீன சாதனைங்களை வாங்கிக்கொடுத்துவிட அவற்றில் மிகவும் எக்ஸ்பர்ட்டாக இருப்பாராம் ராஜ்கிரண்.
வாட்ஸ்அப், டிவிட்டர் என்று அவர் செய்யும் அட்டகாசங்கள் ரசிக்கவைக்கும் என்கிறார்கள். தாத்தாவும் பேரனும் மாதிரி இல்லாமல் நெருங்கிய நண்பர்கள் போல ராஜ்கிரணும் சிவகார்த்திகேயனும் இருப்பார்களாம். படத்தில் இவர்கள் மட்டுமின்றி சமுத்திரக்கனி உட்பட சுமார் அறுபதுநடிகர்கள் நடித்திருக்கிறார்களாம். வருத்தப்படாதவாலிபர்சங்கம் படத்துக்குப் பாடல்கள் பெரும்பலம். இந்தப்படத்திலும் ¬ந்துபாடல்களை ஐந்துவகையாகப் போட்டுக்கொடுத்து வெற்றிக்கு உறுதுணையாக இருக்கிறார் இமான் என்று சொல்கிறார்கள்.