வெள்ளைக்கொடி படுகொலைகளின் சதிகாரன் நம்பியார்-கஸ்பர்
2009 மே 18-ஆம் நாள் தமிழ் ஈழ விடுதலைக்கென முப்பது ஆண்டு
காலம் நடத்திய ஆயுதமேந்திய போராட்டத்தினை விடுதலைப்புலிகள் மௌனித்தனர். அதற்குப் பின்னரும் இப்போதும் ஈழ விடுதலை பற்றி பலரும் தொடர்ந்து பேசுகின்றனர். சிலர் முழங்கிப் பிளிறவும் செய்கின்றனர். எப்போதும் போலவே தமிழக அரசியலின் தேவைகளுக்கேற்ப பகடைக் காயாகவும் உருட்டுகின்றனர்.
ஆனால் விடுதலைப்புலிகள் மட்டும் மௌனித்தே வாழ்கின்றனர். தாயக விடுதலைக்கென உயிரையும் தரத்துணிந்து முன்சென்ற எந்த வீரனும் எத்தருணத்திலும் அவசியமின்றிப் பேசுவதில்லை. செயல் மட்டுமே அவர்களின் பேச்சு தங்கள் தலைவனைப் போல. முக்கியமாக தெரு வீதி அரசியல் சர்ச்சைகளுக்கு அவர்கள் ஒருபோதும் வந்ததில்லை -வருவதுமில்லை. இன்னும் எஞ்சியிருக்கிற நெருப்பின் குழந்தைகள், தம்மைச் சுற்றி நடக்கும் இரைச்சல்களையும் ஊளைகளையும் சலனமின்றி அதேவேளை உன்னிப்பாக அவதானிக்கிறார்கள்.
ஆனால் அவர்கள் பேசுவதில்லை. தங்கள் சார்பில் பேச எவரையும் அவர்கள் நியமிக்கவுமில்லை. குறிப்பாகப் போருக்குப் பிந்தைய கதையாடல்களின் திரைமறைவு வழிநடத்துநர்களாக இந்திய-இலங்கை உளவு அமைப்புகள் மாறிவிட்ட பின் அவர்களின் மௌனம் மேலும் உறைந்துவிட்டதாகவே சொல்லலாம்.
(அனந்தி அவர்கள் இலங்கை வெகுஜன அரசியலில் இப்போது ஒரு மாகாணசபை உறுப்பினர்). தமிழகத் தேர்தலுக்கு இன்னும் 11 மாதங்களே இருக்கிற நிலையில் பத்திரிகைகள், இணையங்களில் பரபரப்பு பற்றிக் கொண்டுள்ளது. அதன் சாரம் இதுதான்: புலிகளின் அரசியற் பிரிவு பொறுப்பாளர் நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோரை தவறாக வழிநடத்தி சதி செய்து, சரணடைய வைத்தது காங்கிரசும் கனி மொழியும், ஒரு பாதிரியாரும் (அது நானாகத்தான் இருக்க முடியும்).
2009 ஜனவரி 28-ஆம் நாள் இந்தியா முன்னெடுத்த சண்டை நிறுத்த முயற்சியில் காங்கிரஸ் கட்சியே முதன்மையானதாயிருந்தது. கனிமொழியோ, தி.மு.க.வில் வேறெவருமோ கடுகளவும் இதில் சம்பந்தப்படவில்லை. தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தோடான தொடர்பாளராக எனக்கு சிறியதோர் பாத்திரம் இருந்தது.
பொதுத்தேர்தல் கணக்குகளோடு முன்னெடுக்கப்பட்ட சண்டை நிறுத்த முயற்சியென்பதால் நிச்சயம் அது வெற்றிபெற வாய்ப்பிருந்தது. அந்த முயற்சி நல்லபடி நடந்திருந்தால் விடுதலைப் போராட்ட வரலாறு இன்று வேறு மாதிரி இருந்திருக்கும். ஏன் அந்த முயற்சியை நிராகரித்தார்கள் என்று விடுதலைப்புலிகள் எங்கும் இன்றுவரை பதிவு செய்யவில்லை.
தோழர் தியாகு போன்றவர்கள் "தனித்தமிழ் ஈழம் என்ற நிலைப்பாட்டினை விட்டுவிடுவதாக அறிவிக்கும்படி இந்தியா கட்டாயப்படுத்திய தால்தான் புலிகள் இந்தியாவின் சண்டை நிறுத்த முயற்சியிலிருந்து விலகிக்கொண்டனர்' என்கிறார்கள். இதனை நான் ஏற்கவில்லை. ஏனென்றால் இரு தரப்பிற்கும் ஏற்புடையதான ஓர் அறிக்கையினை அப்போது நான்தான் எழுதினேன். அதில் இரு தரப்பினருக்கும் எந்தப் பிரச்சினையும் இருக்க வில்லை. இருந்தும் ஏன் புலிகள் விலகினார்கள் என்பதை பின்னோக்கிப் பார்த்து அனுமானிக்க மட்டுமே முடிகிறது. எனது அனுமானங்கள் மூன்று.
3. ஈழத்தின் குரலாளர்களாக தங்களை தமிழகத்தில் அப்போது பிரதிநிதித்துவப்படுத்திய தலைவர்கள் புலிகள் மீது கடுமையான எதிர் அழுத்தம் கொணர்ந்தனர். (இது குறித்து பகிரங்க விவாதங்களுக்கு நான் தயாராகவே இருக்கிறேன்.)
இவர் நடேசன்-புலித்தேவனோடு பேசியவையும்... முக்கியமாக ஐ.நா. அலுவலர்களுக்கான தலைவர் விஜய் நம்பியாருடன் பேசியவையும் ஐ.நா. அறிக்கையில் பதிவாகியுள்ளன. விஜய்நம்பியார், ராஜபக்சேவிடம் பேசி "வெள்ளைக் கொடி ஏந்திச் சென்று சரணடையும்' ஏற்பாட்டினை மேரி கோல்வினுக்குத் தெரிவித்துள்ளார். ஆனால் சரணடைதல் நிகழும்போது ஐ.நா. அதிகாரிகள் இருக்க வேண்டுமென்று ஏன் ராஜபக்சேவிடம், விஜய் நம்பியார் வலியுறுத்தவில்லை என்பது முக்கியமாக எழுப்பவேண்டிய கேள்வி. அவ்வகையில் வெள்ளைக்கொடிப் படு கொலைகளின் அனைத்துலக சதிகார னாக விஜய் நம்பியாரை நாம் கருதலாம்.
இன்னொரு முனையில் நடேசன், புலித்தேவன் இருவருமே தமிழராகிய இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு மூலமாக சரணடைதல் பற்றி இலங்கை அரசுடன் நேரடியாகப் பேசியுள்ளனர். இலங்கை வெளியுறவுச் செயலர் பாலித கோஹனே மூலம் ராஜபக்சே சகோதரர்களிடம் நடந்த பேச்சுவார்த்தைகளும் ஐ.நா. அறிக்கை யில் பதிவாகியுள்ளது. சில பதிவுகள் இங்கே:
* மே 17, ஞாயிறு மாலை 3.29க்கு பாலித கோஹனே ஐரோப்பிய இடைப்பாட்டாளர் ஊடாக நடேச னுக்கு அனுப்பிய குறுஞ்செய்தி: "வெள்ளைக் கொடி. இரு கைகளையும் உயர்த்தி மெதுவாக நடவுங்கள்.'
* மாலை 6.30. நடேசன், சந்திரநேருவுக்கு: "தலைமையின் அறி வுறுத்தலின்படி நாங்கள் சரணடையத் தயாராயுள்ளோம்.'
* மாலை 7.30 மணி பசில் ராஜபக்சே, சந்திரநேருவுக்கு: "சரணடை தல் நிபந்தனைகளை அதிபர் ஏற்று விட்டார்.'
* மே 18 அதிகாலை 1.30: நடேசன், நேருவுக்கு தொலைபேசு கிறார். "3,000 போராளிகளும், 22,000 பொதுமக்களும் சரணடையவுள்ளோம். ஆனால் எறிகணைகள் வீசுகிறார்கள்.'
* அதிகாலை 1.45: "அமெரிக்காவோடும் நேரடியாகப் பேசுகிறோம்' என நடேசன் நேருவுக்குச் சொல்கிறார்.
* அதிகாலை 3.30: புலித்தேவன், நார்வே அதிகாரிகளுக்குத் தொலைபேசி, சரணடைதல் தகவல் சொல்லி உதவியும் கோருகிறார்.
* காலை 5 மணி: நடேசன், சந்திரநேருவுக்கு தொலை பேசி, தங்களை நோக்கிய எறிகணை வீச்சு தொடர்வதாகக் கூறுகிறார்.
* காலை 5.30: மேரி கோல்வின், விஜய் நம்பியாரை அழைத்து சரணடைதலை மேற் பார்வையிட கொழும்பில் இருக்கும் அவர் செல் லாதது தவறு என வாதிடுகிறார்.
* காலை 5.51: கொழும்பு பிரித்தானிய தூதரகத்தின் இரண்டாம் செயலர் சந்திரநேருவை அழைத்து சரணடைதல் பற்றி அரசுடன் தாங்களும் பேசுவதை தெரிவிக்கிறார்.
* காலை 6.10: சந்திரநேரு, அதிபர் ராஜபக்சேவிடம் பேசுகிறார். சரணடைதலை மேற்பார்வையிட தான் செல்ல விரும்புவதை தெரிவிக்கிறார். "அவசியமில்லை, எமது ராணுவம் கட்டுக்கோப்பானது' என ராஜபக்சே கூறுகிறார்.
* காலை 6.20: புலித்தேவன் முன்செல்ல சரணடைதல் பயணம் தொடங்கிவிட்டது தெரிவிக்கப்படுகிறது.
* காலை 8 மணி: சந்திரநேருவின் நண்பரும் பாராளு மன்ற உறுப்பினருமான ஜான்ஸ்டன் பெர்னான்டோ தொலைபேசியில் அழைத்து "நடேசனும் ஏனையவர்களும் கொல்லப்பட்டு விட்டார்கள்' என்கிறார்.
இதே காலகட்டத்தில் புலிகள் இயக்கத்தின் வெவ்வேறு நிலைகளில் உள்ளவர்கள் தமி ழகத்திலிருந்த தமது தொடர்புகளோடு பேசினார்கள் என்பதும் உண்மைதான். ஆனால் சரணடைதல் பேச்சுவார்த்தைகளில் நேரடியாக சம்பந்தப்பட்டிராத கனிமொழி எப்படி சரணடையும் அறிவுறுத்தலை வழங்கியிருக்க முடியும்?