புவியின் நேரம் ஒரு செக்கனால் அதிகரிப்பு
புவியின் சுழற்சி வேகம் மந்தமடைந்துள்ளதன் காரணமாக நேரத்தை ஒரு செக்கனுக்கு அதிகரிக்கும் நடவடிக்கை இன்று நள்ளிரவு மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன்படி. அணு ஆற்றலால் இயங்கும் சர்வதேச நேரத்தைக் காட்டும் கடிகாரம் ஒரு செக்கன் அதிகரிக்கப்படவுள்ளது. இந்த நேரம் கிறின் வீச் நேரத்துடன் ஒப்பிட்டு மாற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கையடக்க தொலைபேசி மற்றும் டிஜிட்டல் நேர கணிப்பாண்களில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்படுகிறது.