Breaking News

சு.க. பிளவுபட்ட சந்தர்ப்பங்களிலெல்லாம் ஐக்கிய தேசிய கட்சியே ஆட்சியமைத்தது

ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக் ­கட்சி பிள­வு­பட்டு செயற்­பட்டு வந்த கால­கட்­டத்தில் எல்­லாமே ஐக்­கிய தேசி­யக் ­கட்­சியே ஆட்­சி­ய­மைத்­தமை வர­லா­றாகும். எனவே சுதந்­தி­ரக்­கட்சி யானாலும் சரி ஐ.ம.சு.முன்­ன­ணி­யா­னாலும் சரி பிரிந்துநின்று பிள­வு­பட்டு நின்று செயற்­பட இட­ம­ளிக்க மாட்டேன். நாட்­டுக்கு ஒரு தலை­வரே இருக்க முடியும். அதே­போன்று கட்­சிக்கும் ஒரு தலை­வரே இருக்­க­வேண்டும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.

பதுளை நூலக சேவை கேட்போர் கூடத்தில் நடை­பெற்ற ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி பதுளை மாவட்ட மாநாட்டில் ஜனா­தி­பதி கலந்து கொண்டு சிறப்­பு­ரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறினார்.

ஜனா­தி­பதி தொடர்ந்து பேசு­கையில் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியை சார்ந்­த­வர்­களால் மட்­டுமோ தனிச் சிங்­கள மக்­க­ளினால் மட்­டுமோ நாட்டில் ஆட்­சியை ஏற்­ப­டுத்தி விட­மு­டி­யாது. அதே­போன்று ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யி­னாலும் ஆட்­சியை அமைத்­து ­விட முடியாது.

நாட்டில் வாழும் அனைத்து இன, மத, கட்­சி­யி­ன­ரையும் ஒன்­றி­ணைத்து ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யினர் செயல்­ப­டு­வதன் மூலமே உறு­தி­யா­னதோர் ஆட்­சியை ஏற்­ப­டுத்த முடியும். பிரிந்து நின்று செய­லாற்­று­வதன் மூலம் பாதிப்­ப­டை­வது நாமா­கவே இருக்கும்.

எமது நாட்டின் வர­லாற்­றினை நாம் திரும்பிப் பார்ப்­போ­மே­யானால் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி பிரிந்து செயல்­பட்ட வேளை­யி­லெல்லாம் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியே ஆட்சிய அமைத்­தமை நன்கு புல­னாகும். ஆகவே இதுபோன்ற தவறை ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியோ ஐக்­கிய மக்கள் சுதந்­தி­ர­க் கூட்­ட­மைப்போ இனிமேல் செய்ய முனை­யக்­கூ­டாது. பிள­வு­பட்­டி­ருந்து நாம் பட்ட துன்­பங்­களை வர­லா­றுகள் கூறு­கின்­றன.

என்னை மக்கள் ஜனா­தி­ப­தி­யாகத் தெரி­வு­செய்­ததும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ என்னைச் சந்­தித்து ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியில் தலை­மைப்­பொ­றுப்­பினை ஏற்­கும்­படி கூறினார். அப்­போது நான் என்னை கட்­சி­யி­லி­ருந்து அகற்­றி­விட்­டீர்­களே நான் எப்­படி தலைமைப் பொறுப்­பி­னை­யேற்க முடி­யு­மென்று பதி­ல­லித்தேன். உங்­க­ளையும் உங்­க­ளுடன் சென்ற 35 பேரையும் கட்­சி­யி­லி­ருந்து நீக்­கி­யதை வாபஸ் பெற்­றி­ருக்­கின்றேன் என்று முன்னாள் ஜனா­தி­பதி என்­னிடம் கூறவே ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி மீதுள்ள எனக்­கி­ருந்­த­பற்­றினால் கட்­சியின் தலை­மையை ஏற்­றுக்­கொண்டேன்.

ஜனா­தி­பதித் தேர்­தலை முன்­னி­லைப்­ப­டுத்தி நான் வெளி­யே­றி­யதும் என் மீது பலர் பல­வாறு விமர்­ச­னங்­களை செய்­தனர். அவ் விமர்­ச­னங்கள் அனைத்­தையும் மக்கள் நிரா­க­ரித்து என்னை வெற்­றி­ய­டைய வைத்­தனர். என்னை விமர்­சித்­த­வர்கள் எவ­ரையும் நான் பகை­வர்­க­ளாக கரு­த­வில்லை. வைராக்­கியம் கொள்­ளவும் மாட்டேன். 

அவ் அனை­வ­ரையும் ஒன்­றி­ணைத்துக் கொண்டு நாட்டு மக்கள் விரும்­பிய மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தவும் புனி­த­மான அர­சியல் கலா­சா­ரத்­தினை மேற்­கொள்­ள­வு­மான செயல்­பா­டு­களை முன்­னெடுத்துக்­கொண்­டி­ருக்­கின்றேன். என்­னையும் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யையும் எவ்­வ­கை­யிலும் பிரித்­துப்­பார்க்க முடி­யாது. நான் பிறந்த வரு­டத்­தி­லேயே ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி உத­ய­மா­னது. அக்கட்சியிலேயே இருந்து வரு­கின்றேன். 

இந்­நாட்டின் அதி சிறந்த அர­சியல் தலை­வ­ராக நான் கூறு­வது அமரர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்­டாரநாயக்­க­வே­யாவார்.அவரும் அர­சி­யலில் பல்­வேறு வேத­னை­க­ளையும் சோத­னை­க­ளையும் அனு­ப­வித்­த­வ­ராவார். இறு­தியில் தேரர் ஒரு­வரின் துப்­பாக்கிச்சூட்­டுக்கு பலி­யா­கினார். அஹிம்­சா­வாதி மகாத்­மா­காந்­தியும் துப்­பாக்கி சூட்­டி­னா­லேயே பலி­யானர்.

எமது நாட்­டி­லி­ருந்து சர்­வ­தேச நீதி­மன்­றத்­திற்கு எவ­ரையும் கொண்டு செல்ல என்னால் அனு­ம­திக்க முடி­யாது. அத்­த­கை­ய­வர்கள் குற்ற மிழைத்­தி­ருப்பின் எமது நாட்டு நீதி­மன்­றத்­தினூடகவே விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட்டு உரிய தண்­டனை வழங்­கப்­படும். இது விட­யத்தில் உறு­தி­யாக நான் இருந்து வரு­கின்றேன்.

இந்­நாட்டின் பெரும்­பான்­மை­யின சிங்­கள மக்கள் மட்­டு­மன்றி தமிழ் ­மக்கள், பெருந்­தோட்­ட­மக்கள், முஸ்லிம் மக்கள் உள்­ளிட்டு அனைத்து தரப்­பி­ன­ரையும் ஒரு கொடியின் கீழ் கொண்டு வரும் வேலைத்திட்டத்தினை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பும் மேற்கொண்டு பலம் பொருந்திய ஆட்சியை நடைபெறப் போகும் பொதுத்தேர்தலில் ஏற்படுத்த வேண்டும்.

நாட்டுக்கு ஒரு தலைவரே இருக்க வேண்டும். அதுபோன்று கட்சியொன்றுக்கும் ஒரு தலைவரே இருக்கவேண்டும். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியோ ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பேன் இரண்டாகப் பிளவு பட்டுவிடக்கூடாது. இப்பிளவுக்கு நான் இடமளிக்கப் போவதில்லை என்றார்