Breaking News

அரசியல் கைதிகளில்லை என அரசு கூறுவது பொய்; 300 பேர் வரையில் உள்ளதாக தகவல்

இலங்கையில் அரசியல் கைதிகள் என்று ஒருவரும் இல்லை என அரசு கூறுகின்ற போதும் குற்றச்சாட்டுக்களின் பேரில் 300அரசியல் கைதிகள் வரையில் பலவருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என முன்னிலை சோசலிச கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித்குமார தெரிவித்துள்ளார். 

வெலிக்கடை சிறைச்சாலைக்கு நேற்று முன்தினம் நேரில் சென்று பார்வையிட்ட பின்னரே இந்தக் விடயத்தை அறிவித்துள்ளார். தடுத்து வைக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கிய குற்றச்சாட்டிற்கு உள்ளானவர்களாவர்.

விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சுதந்திரமாக நடமாடி திரியும் போது உதவியவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பது சரியான விடயமல்ல.

மேலும் அரசியல் கைதிகளை விடுவிக்கும் சமஉரிமை இயக்கத்தின் செயற்பாட்டின் ஒரு நடவடிக்கையே எனது விஜயம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.