Breaking News

வடக்கு அவையில் 30 ஆவது அமர்வு இன்று ஆரம்பம்

வடக்கு மாகாண சபையின் 30 ஆவது மாதாந்த அமர்வு அவைத்தலைவர் சீ.வி . கே சிவஞானம் தலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

கைதடியில் அமைந்துள்ள மாகாண சபையின் கட்டட தொகுதியில் இன்று காலை 9.30 மணிக்கு சபை அமர்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்றைய அமர்வில் அவைத்தலைவரின் அவசர பிரேரணை உள்ளிட்ட ஆறு பிரேரணைகளும் முதலமைச்சர் மற்றும் விவசாய அமைச்சர்களைக் கேட்பதற்கான வாய்மொழி மூல வினாக்களும் உள்ளடங்குகின்றது. 

அத்துடன் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான நியதிச்சட்டமும் இன்று சபையில் சமர்ப்பித்து விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.