Breaking News

20 ஐ வைத்­து பிர­தமர் இன­வாதம் செய்­கி­றார் பிரபா கணேசன் குற்­றச்­சாட்­டு

தேர்­தல்­மு­றை மாற்­றத்தின் மூல­மாக சிறு­பான்மை பிர­தி­நி­தித்­து­வத்தை குறைப்­ப­தற்­கான வேலைத்­திட்­டத்தை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேற்­கொண்டு வரு­வ­தாக கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பிரபா கணேசன் தெரி­வித்­துள்ளார். 

இது தொடர்பில் அவர் விடுத்­துள்ள அறிக்­கையில் மேலும் தெரி­வித்துள்­ள­தா­வ­து;

20ஆவது திருத்த சட்­டத்தின் மூலம் தனது தொகு­திக்கு பொறுப்புக் கூறக்­கூ­டிய பிர­தி­நி­தித்­து­வத்தைப் பெற்றுக் கொள்­ளலாம். இதன் மூலம் அனைத்து தொகு­தி­களும் அபி­வி­ருத்தி செய்­யப்­ப­டு­வது கட்­டா­ய­மாக்­கப்­படும்.

விருப்­பு­வாக்கு முறை ஒழிக்­கப்­ப­டு­வதன் மூலம் அர­சியல் குரோ­தங்கள் கலை­யப்­படும். அது மட்­டு­மின்றி தொகு­தி­யி­லேயே பிர­சாரம் செய்­வ­தற்கு பாரிய பண­வி­ரயம் செய்ய வேண்­டிய அவ­சியம் இருக்­காது. இதன் மூலம் பணம் படைத்­த­வர்­க­ளுக்குத் தான் அர­சியல் என்ற நிலை மாற்­றப்­படும். எது எவ்­வா­றா­யினும் சிறு­பான்மை பிர­தி­நி­தித்­து­வத்­திற்கு பாதிப்பு ஏற்­ப­டாத வகையில் இத்­தி­ருத்த சட்டம் உள்­வாங்­கப்­பட வேண்டும். இதற்­கா­கவே சிறு­பான்மை மக்­களின் கட்­சி­க­ளுக்கும் சிறிய கட்­சி­க­ளுக்கும் அழைப்பு விடுத்து இது சம்­பந்­த­மான பேச்­சு­வார்த்­தையை ஆரம்­பிப்­ப­தற்கு முன்­னோ­டி­யாக இருந்து செயல்­பட்டேன்.

அதன் மூல­மாக பல வித­மான கலந்­து­ரை­யா­டல்கள் இடம்­பெற்­றன. ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சிக்கும் ஐக்­கிய தேசிய கட்­சிக்கும் சிறு­பான்மை மக்­களின் பிர­தி­நி­தித்­துவம் சம்­பந்­த­மான அக்­க­றையை தோற்­று­வித்தோம்.

பாரா­ளு­மன்­றத்தில் பெரு­பான்மை கொண்ட கட்­சி­யான ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் 20ஆவது திருத்தம் சம்­பந்­த­மான பல கலந்­து­ரை­யா­டல்­களில் கலந்து கொண்டு சிறு­பான்மை மக்­க­ளுக்கு சாத­க­மான வரைபு ஒன்றை தயா­ரித்­தி­ருந்தோம். திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற அமைச்­ச­ரவை கூட்­டத்தில் இவ்­வ­ரைபை சமர்ப்­பிக்­க­வி­ருந்த போதும் ஐக்­கிய தேசிய கட்சி தான் தயா­ரித்த வரைபை அமைச்­ச­ர­வையில் சமர்ப்­பித்­தது. இவர்­க­ளது யோச­னை­யின்­படி 160 தொகு­திகள் 125ஆக குறைக்­கப்­பட வேண்டும் என்றும் 75 பேர் மாவட்ட ரீதி­யா­கவும் 25 பேர் தேசிய பட்­டி­ய­லிலும் தெரிவு செய்­யப்­ப­டு­வார்கள் என்றும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­து

160 தேர்தல் தொகு­திகள் 125ஆக குறைக்­கப்­படும் போது வாக்­கா­ளர்­களின் எண்­ணிக்­கையும் நிலப்­ப­ரப்பும் கணக்கில் எடுக்­கப்­படும். இப்­படி புதி­தாக கணிக்­கப்­படும் போது ஒரு தொகு­திக்கு ஒரு இலட்­சத்து இரு­ப­தா­யிரம் வாக்­கா­ளர்கள் தேவைப்­ப­டு­கி­றார்கள்.

யாழ் மாவட்­டத்தில் இன்­றைய வாக்­காளர் தொகு­தி­யின்­படி பதி­னொரு தொகு­திகள் நான்கு அல்­லது ஐந்து தொகு­தி­க­ளாக குறைக்­கப்­படும் அபாயம் உள்­ளது. அது மட்­டு­மல்ல நுவ­ரெ­லியா மாவட்­டத்­திலும் இவ்­வா­றா­ன­தொரு நிலைமை ஏற்­படும். கொழும்பு மாந­க­ரத்­திற்­குள்ளும் கொழும்பு மேற்கு பொரளை போன்­ற­ தொகு­தி­கள் ஒரு தொகு­தி­யாக மாற்­றப்­படும் சாத்­தியம் இருக்­கி­றது. 

இதன் மூலம் சிறு­பான்மை மக்­க­ளுக்கு பாரிய பாதிப்­புகள் ஏற்­ப­ட­வி­ருக்­கின்­றது. இது சம்­பந்­த­மாக செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி தலை­வர்கள் கூட்­டத்­திலும் குழு கூட்­டத்­திலும் எமது அதி­ருப்­தியை நாம் தெரி­வி­தத்­தி­ரு­ந்தோம். இதனை ஏற்றுக் கொண்ட அமைச்சர் ராஜித சேனா­ரத்ண ஹெல­உறுமய தலைவர் ரத்­ன தேரர் இரு­வரும் ஏற்றுக் கொண்­டார்கள்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் சிறு­பான்மை மக்­க­ளுக்கு எதி­ரான இவ்­வா­றான செயல்­பா­டு­க­ளுக்கு தாம் ஒரு போதும் துணை போகப் போவ­தில்லை என அமைச்சர் ராஜித சேனா­ரத்ண குறிப்­பிட்டார். அது மட்­டு­மல்ல தொகு­தி­களை 125ஆக குறைக்கும் யோச­னையை பிர­தமர் முன் வைக்கும் பொழுது அமைச்­சர்­க­ளான ஹக்கீம், ரிசாட் பதி­யுதீன், திகாம்­பரம் போன்­ற­வர்கள் வாய்­மூடி மௌணித்­தி­ருந்­த­தா­கவும் இதனை தான் பகி­ரங்கப் படுத்­து­வ­தா­கவும் குழு கூட்­டத்தின் போது அமைச்சர் ராஜித்த சேனா­ரத்ண தெரி­வித்தார். இதனை பார்க்கும் போது சிறு­பான்மை அமைச்­சர்கள் தமிழ் ஊட­கங்­க­ளுக்கு சொல்­வ­தொன்று அமைச்­ச­ர­வையில் நடந்து கொள்­வது வேறொன்­றாக இருக்­கின்­றது.

இருப்­பினும் சிறு­பான்மை கட்­சி­களின் எதிர்ப்பை ஏற்­ப­டுத்தி 20ஆவது திருத்த சட்­டத்தை கொண்­டு­வ­ராமல் தடுப்­ப­தற்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க வேடம் போடுகிறாரா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இப்புதிய ஆலோசனை நடைமுறைப்படுத்தப் படுமாயின் சிறுபான்மை பிரதிநிதித்துவம் பாரியளவில் பாதிக்கப்படும். கடந்த சில நாட்களாக 20ஆவது திருத்த சட்டத்தை வைத்து கலந்துரையாடல் நடத்துகின்றோம் என்று ஊடக விளம்பரத்தை தேடிக் கொண்ட ஐக்கிய தேசிய கட்சியின் தமிழ் முஸ்லிம் கட்சி தலைவர்கள் இப்பொழுது வாய்மூடி மௌனித்திருப்பது ஏன் என கேட்க விரும்புகின்றேன்.