புலம்பெயர்ந்தோர் விழாவுக்கு எதிராக நீதிமன்றம் சென்றால் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்
புலம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள் அல்ல. பெரும்பாலானோர் பிரிவினை சிந்தனையை கைவிட்டுள்ளனர். அதனை கைவிடாதவர்களுடனும் பேச்சுக்களை நடத்துவதன் மூலமே நல் வழிக்கு கொண்டு வர முடியும் எனத் தெரிவித்த வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பேச்சாளர் மகேஷினி கொலன்னே
புலம்பெயர்ந்தோர் விழாவுக்கு எதிராக நீதிமன்றம் செல்வார்களானால் அத் தருணத்தில் அமைச்சு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் தெரிவித்தார். புலம்பெயர் இலங்கையர்கள் விழாவொன்றை இவ்வருட இறுதியில் நடத்தவுள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். இதற்கு இடமளிக்கப் போவதில்லை. நீதிமன்றம் சென்று தடுப்போம் என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்திருப்பதையும் புலிகள் தொடர்பான அமெரிக்காவின் அறிக்கை தொடர்பிலும் கேட்ட போதே வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பேச்சாளர் மகேஷினி கொலன்னே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இந்தியா உட்பட பல நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்பவர்களுக்காக வருடாந்தம் விழா நடத்தப்படும். அதன் மூலம் தமது நாடுகளின் அபிவிருத்தியில் புலம்பெயர்ந்தவர்களின் பங்களிப்பு பெற்றுக்கொள்ளப்படும்.
1970களில் எமது நாட்டிலிருந்து தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் என அனைத்து இனத்தவர்களிலும் பெரும்பாலானோர் வெளி நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். இவர்களது பங்களிப்பை நாட்டின் அபிவிருத்திக்காக பெற்றுக் கொள்வதும் இதன் மூலம் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே இவ்விழா ஏற்பாட்டுக்கான முக்கிய காரணமாகும்.
''டயஸ் போரா'' (புலம்பெயர்ந்த) தமிழர்கள் அனைவரும் புலிகளோடு தொடர்புடையவர்கள் அல்ல. பிரிவினைவாதத்தை கைவிட்டவர்களும் உள்ளனர். இலங்கை பாராளுமன்றத்திலும் இன்று கடும் போக்கை கைவிட்டு மிதவாதத்தை ஏற்றுக்கொண்டவர்களும் உள்ளனர்.
அதேவேளை புலம்பெயர் தமிழர்களில் அடிப்படைவாத பிரிவினை கொள்கைகள் இருக்குமானால் அது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்துவதன் மூலம் கடும் போக்கிலிருந்து அவர்களை வெளியே கொண்டு வர முடியும்.
இவ்வாறு தேசிய நல்லிணக்கத்துக்கான சிந்தனையுடனேயே எமது முயற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக எவராவது நீதிமன்றம் சென்றால் அத்தருணத்திற்கு ஏற்றவாறு நாம் நடவடிக்கைகளை முன்னெடுப்போம். வருடா வருடம் உலகின் பயங்க ரவாத அமைப்புக்கள் தொடர்பாக அமெரிக்கா அறிக்கை வெளியிடும். அதிலேயே உலக நாடுகளில் விடுதலைப் புலிகள் நிதிசேகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆராய்ந்து நட வடிக்கைகள் எடுக்கப்படுமென்றும் மகேஷினி கொலன்னே தெரிவித் தார்.