Breaking News

17 ஆண்டுகளுக்குப் பின் பேரறிவாளன் வேலூரிலிருந்து புழல் சிறைக்கு மாற்றம்

பேரறிவாளன் வேலூர் ஆண்கள் மத்திய சிறையிலிருந்து புழல் சிறைக்கு 17 ஆண்டுகளின் பின்னர் இன்று மாற்றப்பட்டுள்ளார்.

பேரறிவாளன் சிறுநீரக தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் அவருக்கான சிகிச்சையை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வந்தது, ஆனால் தற்போது வேலூர் மருத்துவமனையில் யுரோ ஃப்ளோ என்னும் சிகிச்சை முறை இல்லை. எனினும் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அச்சிகிச்சை முறை உள்ளது.

எனவே சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொள்ளும்படி வைத்தியசாலையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இருப்பினும் இவரை போதிய பாதுகாப்பினை வழங்கி வேலூரில் இருந்து சென்னை அழைத்து செல்வதில் சிக்கல் இருக்கும் காரணத்தினால் சிறைத்துறை டிஜிபி தமிழக அரசிடம் தெரிவித்தார்.

அதனடிப்படையில் பேரறிவாளன் இன்று காலை 8:15 மணிக்கு வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுளார்.  மேலும் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 9:30 மணிக்கு அவருக்கான சிகிச்சை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வழங்கப்பட உள்ளது. இதேவேளை ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்றுவரும் பேரறிவாளன் 17 ஆண்டுகளுக்கு பின்னர் வேலூர் சிறையில் இருந்து மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.