பிசகிப்போன மாவையின் குண்டுத் தாக்குதல் திட்டம்(காணொளி)
அலுவலகம் மீது நடாத்தப்பட்ட திட்டமிட்ட குண்டுத் தாக்குதலின் பின்னணி வெளியாகியுள்ளது. முற்று முழுதாக திட்டமிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே இந்தத் தாக்குதல்ளை நடாத்தியுள்ளனர்.
குருநகர் தண்ணீர்த் தாங்கிப் பகுதியில் உள்ள ஒருவரிடம் இருந்து பெறப்பட்ட டைனமற் வெடி மருந்ததைப் பயன்படுத்தியே இத் தாக்குதலை கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சிறிகாந்தாவின் ஆதரவாளரான நிசாந்தன் என்பவரின்(இவர் கருணாவின் மனைவியின் சகோதரராவார்) வழிகாட்டலில் நடாத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குருநகர் தண்ணீர்த்தாங்கிப் பகுதியைச் சேர்ந்த டைனமற் பாவித்து மீன் பிடித்து நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவரான டேவிட் ஜேம்சன் என்பவர் கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளரும் சட்டத்தரணியுமான சிறீக்காந்தாவால் பிணையில் எடுக்கப்பட்டிருந்தான்.
யாழ் உதயனுக்கும் தெரியப்படுத்தி பெரிய செய்தி போட திட்டமிட்டபோதும் அதனால் தனது வாக்குவங்கி சரிந்துவிடும் என்பதால் எதையும் ஊதி பெரிப்பிக்கும் உதயன் சரவணபவன் அதனை ஒரு சிறிய செய்தியாக போட்டு தனது நிலையை திடப்படுத்தியுள்ளார்.
யாழ் உதயனுக்கும் தெரியப்படுத்தி பெரிய செய்தி போட திட்டமிட்டபோதும் அதனால் தனது வாக்குவங்கி சரிந்துவிடும் என்பதால் எதையும் ஊதி பெரிப்பிக்கும் உதயன் சரவணபவன் அதனை ஒரு சிறிய செய்தியாக போட்டு தனது நிலையை திடப்படுத்தியுள்ளார்.
முன்பக்க குட்டிச் செய்தி |
இதனை தமது ஊடகம் மூலம் வெளியிட்டு அனுதாபம் தேடமுற்படுவதாக சொல்லப்படுகிறது அதற்கேற்றால்போல மாவை சேனாதிராஜாவின் பேட்டியில் வசன நடைகளைப் பாருங்கள் பதட்டமடைந்த வார்த்ததைகள் அல்ல அவை தெளிவாக இந்த சம்பவத்தை வைத்து மக்கள் மேலும் கூடுதலாக வாக்களிப்பார்கள் அதற்கு புலம்பெயர் உறவுகளும் ஊக்கப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கின்றார்.
வீட்டுக்கு வீடு தெருவுக்கு தெருவென பிரச்சாரங்களினில் ஈடுபட்ட மாவை மற்றும் சிறீகாந்தா ஆகியோரை இப்போது தேடி வந்து தாக்கவேண்டிய தேவையில்லையெனவும் திட்டமிட்ட வகையினில் அனுதாப வாக்குகளை திரட்ட முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் வடக்கு-கிழக்கு தமிழ் அரசியலில் - குறிப்பாக வடக்கு அரசியலில் - குறிப்பாக யாழ்-கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் - குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியலில் -தேர்தலுக்கு 2 நாட்கள் இருக்கையில் நடத்தப்படுகின்ற எந்த ஒரு தாக்குதலும் -தாக்கப்படும் வேட்பாளர்களை வெல்ல வைப்பதற்கான ஒரு சிறுமைத்தனமான - கடைசி நேர - உபாயம் மட்டுமே என்பது எமது அனுபவப் பாடமென பிரபல அரசியல் ஆய்வாளர் வழுதி பரந்தாமன் குறிப்பிட்டுள்ளார்.