Breaking News

கொழும்பிலிருந்து யாழ். வந்த பஸ் விபத்து! இருவர் பலி! 19 பேர் படுகாயம்!

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து கொண்டிருந்த தனியார் பஸ் விபத்துக்குள்ளானதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். சாரதி உட்பட 19 பேர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை 4 மணியளவில் மாங்குளம் - மகிழங்குளத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த டிப்பருடன் மோதிய பஸ் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. எனினும் இந்த விபத்தில் காயமடைந்த பலரின் நிலைமை மோசமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகின்றது.