Breaking News

சிறுபான்மை இனங்கள் மூலம் ஏற்பட்ட ஜனநாயக புரட்சி பாதுகாக்கப்படவேண்டும்

ஆட்­சி­மாற்­றத்தின் பின்­ன­ரான காலத்தில் சிறு­பான்மை கட்­சிகள் அனைத்தும் ஒன்­று­பட்டு நிற்­க­வேண்­டிய தேவை அதி­க­மாக உள்­ளது. சிறு­பான்­மை­யி­னரின் மூலம் ஏற்­பட்ட ஜன­நா­யக புரட்சி பாது­காக்­கப்­பட­வேண்­டு­மென தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­வ­ரு­மான மாவை சேனா­தி­ராஜா தெரி­வித்தார்.

தேசிய நீர் வழங்கல் வடி­கா­ல­மைப்புச் சபையின் யாழ். பிராந்­தி­யத்­திற்­கான கட்­டடத் திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்­டதன் பின்னர் உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில்,

தமிழ், முஸ்லிம், மலை­யக சமூ­கங்கள் ஒன்­றி­ணைந்தே புதிய அர­சாங்­கத்தை ஆட்சி பீடத்தில் அமர்த்­தின. தற்­போ­தைய நிலையில் நாம் அனை­வரும் ஒன்­றி­ணைந்து நின்றே மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்­பாக உரிய தீர்­வைப்­பெற்றுக் கொள்ள முடியும். ஆகவே, சிறு­பான்மை தரப்­புக்கள் ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­வதே சிறு­பான்மை மக்­களின் எதிர்­கா­லத்­திற்குச் சிறந்­த­தாக அமையும்.

குடா நாட்டைப் பொறுத்­த­வரை குடிநீர் தொடர்பில் பல்­வேறு பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­கின்­றன. அவ்­வா­றான நிலையில் இப்­புதிய கட்­டடம் தோற்றம் பெற்­றமை மகிழ்ச்சி அளிப்­ப­துடன் குடா­நாட்டு மக்­களின் நீர்ப் பிரச்­சி­னைக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் உரிய நட­வ­டிக்­கை­களை எடுத்து தீர்­வினை வழங்­குவார் என்ற நம்­பிக்­கையும் எமக்கு உள்­ளது.

அத்­துடன் வடக்கில் யுத்­தத்தின் பின்­ன­ரான சூழ்­நி­லையில் வடி­கா­ல­மைப்­புக்­களை மேம்­ப­டுத்தல், மழை நீர் சேக­ரிப்பு போன்ற நிகழ்ச்சித் திட்­டங்­களை மாகாண சபை, உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளூ­டாக முன்­னெ­டுக்க­வேண்­டிய தேவை காணப்­ப­டு­கின்­றது.

ஆகவே, இவற்றை ஆவன செய்தே உரிய நட­வ­டிக்­கை­களை குறித்த அமைச்சு மேற்­கொள்ளும் என்ற எதிர்­பார்ப்பு எமக்­குள்­ளது. இதே­வேளை, தற்­பொ­ழுது 20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் பல்­வேறு கருத்­துக்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. எவ்­வாறா­யினும் சிறு­பான்மை மக்­களின் ஆத­ர­வுடன் ஏற்­பட்ட ஜன­நா­யக புரட்சி எதிர்காலத்திலும் பாதுகாக்கப்பட்டு தேசிய அரசு தொடரவேண்டும். ஆகவே, சிறுபான்மை இனங்களை, கட்சிகளைப் பாதிக்காத வகையில் புதிய ஆட்சியாளர்கள் செயற்பாடுகளை முன்னெடுக்க-வேண்டுமென்றார்.