பொறுப்புக்கூறல், நல்லிணக்கத்தை இலங்கை உறுதிப்படுத்த வேண்டும் – ஜெனிவாவில் அமெரிக்கா
பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
நேற்று ஜெனிவாவில் ஆரம்பமாகிய ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 29வது கூட்டத்தொடரில் உரையாற்றிய அமெரிக்கப் பிரதிநிதி எரிக் ரிச்சட்சன் இதனை வலியுறுத்தியுள்ளார்.
ஜனநாயக அமைப்புகளை மீளமைக்கவும், ஊழலுக்கு எதிராகவும் இலங்கை மக்கள் எடுத்த முடிவை வரவேற்பதாகவும் அமெரிக்கப் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
மேலும், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் இலங்கை தொடர்பான அறிக்கையை வரும் ஓகஸ்ட் மாதம் படித்துப்பார்க்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமெரிக்கப் பிரதிநிதி எரிக் ரிச்சட்சன் ஜெனிவா கூட்டத்தொடரில் கூறியுள்ளார்.
வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30வது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ள இந்த அறிக்கை, வரும் ஓகஸ்ட் மாதம் இராஜதந்திர பணியகங்களுக்கு விநியோகிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.