Breaking News

"சந்­தி­ரி­காவின் பொறுப்­பற்ற செயற்­பா­டு­களே பொது­ப­ல­சேனா அமைப்பு உரு­வாக காரணம்''

முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க அவரது பொறுப்­புக்­களை சரி­வர செய்­தி­ருந்தால் பொது பல சேனா உரு­வா­கி­யி­ருக்­காது என அவ் அமைப்பின் தேசிய அமைப்­பாளர் விதா­ரந்­தெ­னிய நந்­தன தேரர் தெரி­வித்­தார்.

பொது பல சேனா அமைப்பின் கிரு­லப்­பனனை அலு­வ­ல­கத்தில் இடம் பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரி­வித்ததாவது முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்­க­வினால் 2001 ஆம் ஆண்டு பௌத்த சாசன ஜனா­தி­பதி ஆணைக்­குழு உரு­வாக்­கப்­பட்­டது.

அறிக்­கையில் நாட்டில் மத மாற்றம்,கிறிஸ்­தவ மதத்­த­வரின் ஆக்­கி­ர­மிப்பு அதி­க­ரிப்பு பற்றி குறிப்­பிடப் பட்­டுள்­ளது. இதனை முறி­ய­டிக்கும் விதத்தில் நாம் செயற்­பட்டால் எம்மை இன­வாத அமைப்பு என்­கின்­றனர்.

2001 ஆம் ஆண்டு வெளி­யிட்­டுள்ள அறிக்­கையின் பிர­காரம் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பௌத்த மதத்­தவர் மீதான ஆக்­கி­ர­மிப்­புக்­களை முறி­ய­டித்­தி­ருந்தால் பொது பல சேனா என்ற ஒரு அமைப்பு உரு­வா­கி­யி­ருக்­காது.அதே­வேளை 2001 ஆம் ஆண்டில் முன்­வைக்கப் பட்ட மேற்­படி அறிக்கை தொடர்பில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ,பிர­தமர் ரணில், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன , முன்னாள் பிர­தமர் ரட்­ண­சிறி விக்­ர­ம­நா­யக்க போன்றோர் அறிந்­துள்­ளனர்.

அவர்கள் அறிந்­தி­ருந்தும் கூட நாட்டில் நாம் இன­வாத அமைப்­பா­கவே அடை­யாளப் படுத்தப் பட்­டுள்­ளமை கவ­லைக்­கு­ரி­யது. நாம் நாட்டில் இனக் கல­வ­ரங்­களை கட்­ட­விழ்த்து விடு­வ­தாக செய்­திகள் பல வெளியா­கி­யுள்­ளன.

ஆனால் அவற்­றுக்கும் எமது அமைப்­புக்கும் இடையில் எவ்­வித தொடர்பும் இல்லை.இன­வாத கல­வ­ரங்­களை கட்­ட­விழ்த்து விட்­ட­வர்கள் இன்று எம்­மீது குற்றம் சாட்­டு­ப­வர்கள் பக்­கமே உள்­ளனர். மறு­புறம் இன­வாத அமைப்பின் உறுப்­பி­னர்­களை கைது செய்யப் போவ­தா­கவும் தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.அவ்­வாறு கைது செய்­வ­தென்றால் முதலில் மேற்­கு­றி­ப்பிட்ட 2001 ஆம் ஆண்டு பௌத்த சாசன ஜனா­தி­பதி ஆணைக்­குழு உரு­வாக்­கப்­பட்ட போது அமை­தி­யாக இருந்த தற்­போ­தைய தலை­வர்­க­ளையே முதலில் கைது செய்ய வேண்டும் .

இம்­முறை வெசாக் தின கொண்­டாட்­டங்­களின் போது பௌத்த மத பாரம்­ப­ரியம் சீர்­கு­லைக்­கப்­பட்­டுள்­ளதுவெசாக் தின கொண்­டாட்­டங்­களின் போது பல வகை­யிலும் பௌத்த மத பாரம்­ப­ரி­யங்­களை சீர்­கு­லைக்கும் செயற்­பாடு இடம் பெற்­றுள்­ள­மைக்கு சிங்­கள ஊட­க­மொன்றே காரணம் இம்­முறை வெசாக் பண்­டி­கையின் போது சிங்­கள ஊட­க­மொன்று வெசாக் அலங்­கார கூடு­களில் சர்வ மத அடை­யா­ளங்­களை காட்சி படுத்­து­மாறு தெரி­வித்­தி­ருந்­தது.

இது முற்றிலும் தவறான வழிகாட்டலாகும் பௌத்த மக்களுக்கு பௌத்த மதத்தின் பாரம்பரியத்தை சீர்குலைக்கும் இச் செயற்பாட்டில் தமக்கு உடன்பாடு இல்லை. எதிர்காலத்தில் இவ்வாறான தவறான வழி நடத்தல்களை நாட்டின் பொது மக்கள் உள்வாங்கக் கூடாது எனவும் அவர் அறிவுறுத்தல் விடுத்தார்.