Breaking News

தேர்தலுக்கு ஆயத்தமாகுமாறு ரணில் ஆலோசனை

தேர்தலுக்கு ஆயத்தமாகுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கட்சி உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

எதிர்வரும் தேர்தல் எந்த முறைமையில் நடத்தப்பட்டாலும் தங்களது தொகுதிகளுக்குச் சென்று மக்களுடன் இருக்க வேண்டும். தொகுதிகளில் கட்சி ஒழுங்கமைப்பு பணிகளை ஆரம்பிக்க வேண்டும்.

எதிர்வரும் தேர்தல் எந்த முறைமையில் நடத்தப்பட்டாலும் அதனை வெற்றியீட்ட முடியும். இந்த வெற்றியை மாபெரும் வெற்றியாக மாற்ற கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.

எதிர்வரும் தேர்தலை விருப்பு வாக்கு அடிப்படையில் நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதிய கலப்பு முறைமையில் நடத்துமாறு மற்றுமொரு தரப்பினர் கோரி வருகின்றனர். எந்த முறையில் தேர்தல் நடத்தப்பட்டாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களின் நோக்கம் நிறைவேற வேண்டும்.

பெரும்பான்மை ஆசனங்ளைப் பெற்றுக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி, ஆட்சி அமைக்க வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க கட்சி உறுப்பினர்களுக்கு அண்மையில் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.