Breaking News

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கிற்கு விசேட ஏற்பாடுகள் அவசியம்

எதிர்கால சந்ததியினருக்கு சமாதானமும் சுபீட்சமும் கூடிய இலங்கைகைய உருவாக்கும் நோக்குடன், யுத்தக்காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் பொறுப்புக் கூறலை வலியுறுத்தி, சர்வதேச சமூகம் தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்குமென இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு மின்னஞ்சல் மூலமாக வழங்கிய விசேட செவ்வியின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  இவ்வருடப் பிற்பகுதியில் தான் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக இந்த செவ்வியின்போது அவர் தெரிவித்துள்ளார். 

இலங்கையின் துரிதமான பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியை அடைவதற்கான ஒத்துழைப்பைப் பெற்றுக் கொடுப்பதற்காக இலங்கை அரசுடனும் புலம்பெயர் தமிழர்களுடனும் இணைந்து கடுமையாகப் பணியாற்றவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கிற்கு விசேட ஏற்பாடுகள் அவசியமாக உள்ளதாகவும், இலங்கையில் சமாதானம் நிலைநாட்டப்படுமிடத்து மிகத்துரிதமாக நாடு அபிவிருத்தியடையும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.