ஹாட்லி கல்லூரியின் முன்னாள் அதிபர் விபத்தில் உயிரிழப்பு!
பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் முன்னாள் அதிபர் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இவரை பருத்திதுறை முதலாம்கட்டை சந்தியில் அரச திணைக்கள வாகனம் ஒன்று மோதியுள்ளது. விபத்தில் கனகசபாபதி அருளானந்தம் (வயது 61) என்பவரே உயிரிழந்தார். விபத்துகுறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.