தேர்தலுக்கு முன்னர் விமல் வீரவன்சவை கைது செய்யவும் - சந்திரிக்கா கோரிக்கை
பொதுத் தேர்தலுக்கு முன்னர் விமல் வீரவன்சவை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, பொலிஸ் நிதி குற்றத்தடுப்பு பிரிவு தலைவர் ரவி வைத்தியலங்காரவிற்கு உத்தர விட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வீடமைப்பு, பொறியியல் சேவைகள் மற்றும் பொது வசதிகள் அமைச்சின் கீழ் அமைக்கப்பட்ட “ஓஷன் வீவ் டெவலொப்பர்ஸ்” நிறுவனத்தின் மூலம் கடந்த காலங்களில் இடம் பெற்ற நிதி மோசடிக்கு எதிராக விமல் வீரவன்ச கைது செய்யபடவுள்ளார்.
அந்நிறுவனத்தினால் மத்தேகொட மற்றும் கஹாதுடுவ பிரதேசத்தில் வீடமைப்பு திட்டத்தின் ஊடாக 71 மில்லியன் பெறுமதியான 6 வீடுகளை கையளிக்கும் போது நிதி மோசடி இடம் பெற்றுள்ளதாக பொலிஸ் நிதி குற்றத்தடுப்பு பிரிவு கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி கொழும்பு நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்று சமர்ப்பித்துள்ளது.
அரசாங்கத்திற்கு கிடைக்கவிருந்த வருமான இழப்பு மற்றும் பணமோசடி சட்டத்தின் கீழ் பொலிஸ் நிதி குற்றத்தடுப்பு பிரிவு தற்போது வரை விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.