சீனாவின் ஆதிக்கத்தில் இருந்து இலங்கை மீட்பு - இந்திய ஊடகம்
இந்து சமுத்திரத்தில் சீனாவின் ஆதிக்கத்தை இலங்கையின் ஊடாக அமெரிக்கா தடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியவின் ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. இலங்கையின் கடற்பாதுகாப்புக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது. அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் துணைப் பேச்சாளர் ஜெப் ரத்தே இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்து சமுத்திரத்தை பலவந்த கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சிகளுக்கு எதிராக இலங்கை செயற்படும் என்றும், அதற்கு அமெரிக்காவும் ஒத்துழைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க ராஜாங்க செயலாளர் இலங்கை வந்திருந்த போது, இந்த விடயத்தை பற்றி பேச்சுவார்த்தை நடத்தி இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கு முன்னர் இலங்கையை பயன்படுத்தி சீனா இந்து சமுத்திரத்தில் தமது ஆதிக்கத்தை செலுத்த முயற்சித்துவந்தது. ஆனாலும் ஆட்சி மாற்றத்தின் பின்னர் இந்த நிலைமை மாற்றம் கண்டுள்ளதாகவும், அமெரிக்க அதனை பயன்படுத்திக் கொள்வதாகவும் அந்த ஊடகம் கூறியுள்ளது.
இதன் மூலம் சீனாவின் இந்துசமுத்திர பாதுகாப்பு வலையத்தில் இருந்து இலங்கை மீட்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.