பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பப்படிவம் இன்று வெளியிடப்படும்
பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் அடங்கிய மாணவர் கையேடு இன்று (07) வெளியிடப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானி யங்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
இம்முறை சில புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா கூறினார். விண்ணப்பங்களை அனுப்புவதற்கு முன்னர், அந்த கையேட்டினை மாணவர்கள் முழுமையாக வாசித்து, தெளிவுபெற வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர் கையேட்டில் அனைத்து விடயங்களும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக மொஹான் டி சில்வா மேலும் தெரிவித்தார்.