நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவு சுயாதீனமாகவே இயங்குகிறது - பிரதமர் அலுவலகம் அறிக்கை
பொலிஸ் நிதி மோசடி குற்ற விசாரணைப் பிரிவு மற்றும் ஊழல் மோசடி தடுப்புக்குழு உள்ளிட்ட சட்டத்தை பாதுகாக்கும் பிரிவுகளினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் அனைத்தும் சுயா தீனமானவையாகவே அமையும். நாட்டில் சட்டத்தை நிலைநாட் டும் போது எந்தவொரு அரசியல் தலையீடும் இடம்பெறாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் பொலிஸ் நிதி மோசடி குற்ற விசாரணை பிரிவையோ ஊழல் மோசடி தடுப்பு குழுவையோ அமைச்சரவையின் உப குழு் நிர்வகிப்பதில்லை. பொலிஸ் திணைக்களத்திற்குள்ள அதிகாரங்கள் தவிர்ந்த வேறு எந்தவொரு அதிகாரமும் நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதி மோசடி குற்ற விசாரணை பிரிவு மற்றும் ஊழல் மோசடி தடுப்பு குழு தொடர்பில் பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாட்டில் ஊழல் மோசடி அதிகரித்த காரணத்தினாலேயே பொலிஸ் நிதி மோசடி குற்ற விசாரணை பிரிவு ஸ்தாபிக்கப்பட்டது. பொலிஸ் கட்டளை சட்டத்தின் பிரகாரமே இந்த பிரிவு ஸ்தாபிக்கப்பட்டது. பொலிஸ் திணைக்களத்தின் கீழ் 64 பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத விசாரணை பிரிவு உள்ளிட்ட பிரிவுகள் இதில் உள்ளடங்குகின்றன.
பொலிஸ் திணைக்களத்தின் ஆரம்பக்காலப்பகுதியில் இவ்வாறான பிரிவு காணப்படவில்லை. மாறாக நாட்டின் தேவையினை கருத்திற் கொண்டே இவ்வாறான பிரிவுகள் நிறுவப்பட்டன. இது போன்றே நிதி மோசடி விசாரணை பிரிவும் நிறுவப்பட்டது.. இந்த பிரிவுகளுக்கு பொலிஸ் திணைக்களத்திற்குள்ள அதிகாரங்கள் தவிர்ந்த வேறு எந்தவொரு அதிகாரமும் கிடையாது
ஊழல்,மோசடி தடுப்பு குழு என்ற அமைச்சரவை உபகுழுவானது ஜனவரி 21 ஆம் திகதியே அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் ஸ்தாபிக்கப்பட்டது. எதிர்காலத்தில் ஊழல் மோசடிகளிலிருந்து நாட்டை பாதுகாக்கும் நோக்குடனே இந்த குழு நியமிக்கப்பட்டது. இதற்கென பிரத்தியேகமான முறையில் அலுவலகம் ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவ்வாறான சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்களையோ விசாரணை பிரிவுகளையோ அமைச்சரவையின் உப குழு நிர்வகிப்பதில்லை. நிதி மோசடி உள்ளிட்ட விசாரணை பிரிவுகளினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளை வாரம் தோறும் விரிவான முறையில் ஆராயப்படுகிறது.
நிதி மோசடி குற்ற தொடர்பான விசாரணை பிரிவு உள்ளிட்ட சட்டத்தை பாதுகாக்கும் ஏனைய நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் அனைத்தும் சுயாதீனமானது். அதில் எந்த சந்தேகமும் இல்லை. நாட்டில் சட்டம் நிலைநாட்டும் விடயத்தில் ஒரு போதும் அரசியல் தலையீடுகளும் ஏற்படாது என பிரதமர் அலுவலம் தெரிவித்துள்ளது.