வித்தியா படுகொலை தொடர்பில் தொடர்ந்தும் சி.ஐ.டி.யினர் பலகோணங்களில் விசாரணை - பொலிஸ் பேச்சாளர்
புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மை தொடர்பிலான விசாரணைகள் விசேட குற்றப்புலனாய்வு பிரிவினரால் பலகோணங்களில் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 9 பேரையும் தவிர விசாரணைகள் முடிவடையும் வரை இதனுடன் மேலதிகமாக தொடர்புடையவர்கள் குறித்து எதனையும் குறிப்பிட முடியாது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
பொலிஸ் தலைமையகத்தில் நேற்று வெ ள்ளிக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர்சந்திப்பின் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ரூவன் குணசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில் யாழ்பாணம் புங்குடுதீவு மாணவி கூட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் பலகோணங்களில் குற்றப்புலனாய்வு பிரிவினரினால் விசாராணைகள்முன்னெடுக்கப்படுகின்றன.
அந்த வகையில் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்களாக சந்தேகத்தின்பேரில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு இவர்கள் தொடர்பில் குற்றப்புலனாய் பிரிவினர் ஸ்த்தலத்தில் இருந்து விசாரானைகளை பலகோணங்களில்முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த சம்பவத்தை கண்டித்து யாழ்பாணத்தில் அன்மையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் எற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து அங்கு பொது சொத்துகளுக்கு சேதம்விளைவிக்கப்பட்டமை தொடர்பில் 130 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தொடர்பிலான விசாரணைகள் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் முன்னெடுக்கப்படுவதோடு இந்த ஆர்பாட்டத்தின்போது பொலிஸாரின் செயற்பாடுகள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது. இதில் பொலிஸாரினால் ஏதேனும் தவறுகள் இடம்பெற்றுள்ளமை உறுதிப்படுத்தப்படுமானால் கடமையில்இருந்த பொலிஸாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதனிடையே இச்சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளி ஒருவரை பாதுகாக்கும் முகமாக உயர்பொலிஸ் அதிகாரி ஒருவர் செயற்பட்டதாக கூறப்படுவது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவரினால் கேள்வி எழுப்பபட்டது. இதற்கு பதிலளித்த பொலிஸ் ஊடக பேச்சாளர்,
குறித்த சம்பவத்துடன் தொடர்பு உடையவர்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவரும்நிலையில் உயர்பொலிஸ் அதிகாரி ஒருவரின் தொடர்பு குறித்து பொலிஸ்மா அதிபருக்கோ பொலிஸ்திணைக்களத்திற்கோ எந்த ஒரு அறிக்கையும் இதுவரை கிடைக்கவில்லை அவ்வாறான அறிக்கை ஒன்று கிடைக்கும் பட்சத்தில் முழுமையான விசாரணைகளின் பின் குறித்த அதிகாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.என்றார்.