புங்குடுவுதீவு மாணவி படுகொலையை கண்டித்து யாழ்.பல்கலையில் ஆர்ப்பாட்டம்! (படங்கள் இணைப்பு)
புங்குடுதீவில் மாணவி கூட்டு வன்புணர்வின்பின் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை யாழ்.பல்கலைக்கழகத்தில் கொட்டும் மழையின் மத்தியிலும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மதியம் 12 மணியளவில் ஆரம்பமாகிய இவ் ஆர்ப்பாட்டத்தில். யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்,மாணவர் ஒன்றியம் மற்றும் ஊழியர் சங்கத்தினர் போன்றோர் கலந்து கொண்டதோடு கொலைசெய்யப்பட்ட மாணவிக்கு நீதியான விசாரணை நடத்தி குற்றவாளிக்கு தண்டணை பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் , யாழ்ப்பாணத்தில் சீரழிந்து செல்லும் கலாச்சாரத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் வழியுறுத்தப்பட்டுள்ளது.