Breaking News

திருக்கணித பஞ்சாங்கக் கணிதர் சிதம்பரநாதக் குருக்கள் காலமானார்

திருக்கணித பஞ்சாங்கக் கணிதர் கலாபூஷணம் சி.சிதம்பரநாதக் குருக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் யாழ். போதனா வைத்தியசாலையில் தனது 80ஆவது வயதில் காலமானார்.

18.12.1935 இல் பிறந்த இவர் தென்மராட்சிப் பிரதேசத்தில் பல ஆலயங்களில் பிரதம குருவாகக் குருத்துவப் பணிகளை மேற்கொண்டவர். மட்டுவிலில் இருந்து வெளிவரும் திருக்கணித பஞ்சாங்கத்தின் பிரதம ஆசிரியராகவும் திகழ்ந்தார். வேதாகம சோதிட பூஷணம், சிவாச்சாரிய திலகம், கலாபூஷணம் முதலிய கௌரவப் பட்டங்களையும் இவர் பெற்றவர்.