Breaking News

யாழ்ப்பாண ஆர்ப்பாட்டம் சிங்களவர்களுக்கு எதிரானது அல்ல - சுமந்திரன்

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டமானது 18வயதான மாணவி கொல்லப்பட்டமையை கண்டிக்கும் வகையில் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டதே அன்றி சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் கருத்துத்தெரிவிக்கையில்,

ஜாதிக ஹெல உறுமய கூறுவதைப்போன்று அந்தப்போராட்டம் யாழ்ப்பாணத்தில் சிங்களவர்கள் வாழும் பிரதேசங்களை இலக்கு வைத்து நடத்தப்படவில்லை என்றும் ஹெல உறுமயவின் கதை முழுமையாக சோடிக்கப்பட்டதாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த ஜாதிக ஹெல உறுமய யாழ்ப்பாணத்தில் வாழும் சிங்களவர்களை பயமுறுத்தும் வகையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டிருந்தது.

எனினும் இதனை கண்டித்துள்ள சுமந்திரன் இனவாதத்தை தூண்டும் வகையிலான இந்த செய்தியை ஹெல உறுமய திரும்பப்பெறவேண்டும் என்று கோரியுள்ளார்.