விமல், சத்யராஜ் காமெடி சரவெடி விரைவில்!
காமெடி கூட்டணி , இரு ஹீரோக்கள் படம், கிராமத்து கதை என தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை தக்க வைத்துள்ளார் விமல். பெரிய ப்ளாக் பஸ்டர் படங்கள் இல்லை என்றாலும் மினிமம் கேரண்டி நாயகனான இவர் தற்போது பூபதி பாண்டியனுடன் கைகோர்த்துள்ளார்.
’திருவிளையாடல் ஆரம்பம்’, ’மலைக்கோட்டை’, ‘ பட்டத்து யானை’ என காமெடி கலந்த கமர்ஷியல் படங்களுக்கு கைதேர்ந்த பூபதி பாண்டியன் இயக்கத்தில் அடுத்து ஒரு படத்தில் விமல் நடிக்க உள்ளார். இதில் சிறப்புச் செய்தி சத்யராஜ் ஒரு முக்கிய ரோலில் நடிக்க இருக்கிறார். விமலுக்கு அப்பா பாத்திரம் எனவும் கூறப்படுகிறது.
படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரிக்க உள்ளார். புதுக்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் படப்பிடிப்பு நடக்க உள்ளது. மற்ற நடிகர்கள் , தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது.