நயன்தாராவிற்காக பாடும் ஸ்ருதி
‘இது நம்ம ஆளு’ படத்தில் டூயட் பாடல் ஒன்றை பாடுகிறார் ஸ்ருதி. நடிப்புடன் அவ்வப்போது பாடவும் செய்கிறார் ஸ்ருதி, அனிருத், இமான் என பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடியிருக்கிறார்.
குறளரசன் இசையமைக்கும் இது நம்ம ஆளு படத்திலும் பாடுகிறார் இதுவொரு டூயட் பாடல். சிம்பு, நயன்தாரா நடித்துவரும் இது நம்ம ஆளு படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். இந்தப் படத்துக்கு இசையமைப்பதன் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் சிம்புவின் தம்பி குறளரசன்.
சிம்பு – நயன்தாரா டூயட் பாடலைதான் ஸ்ருதி பாடுகிறார் சிம்புவுக்கு அவரே குரல் தருவார் என கூறப்படுகிறது.