ஜனநாயகத்தை கட்டியெழுப்ப இலங்கையுடன் அமெரிக்கா இணைந்திருக்கும்!
நாட்டில் ஜனநாயகத்தை கட்டியெழுப்ப அமெரிக்க மக்கள் இலங்கையுடன் இணைந்திருப்பார்கள் என, அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரி குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஜோன் கொர்ரி, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் கலந்து கொண்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர், இலங்கையுடனான உறவை விரிவுபடுத்தவும் ஆழப்படுத்தவும் உத்தேசித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் இலங்கை அரசாங்கத்திற்கு திறைசேரி மற்றும் வர்த்தகத் துறைகளிலுள்ள அமெரிக்க அதிகாரிகளால் தொழில்நுட்ப உதவிகளை வழங்கவுள்ளதாகவும் ஜோன் கெர்ரி இதன்போது தெரிவித்துள்ளார்.