வாசுவை ஆட்டி வைப்பது மகிந்தவே!– விக்ரமபாகு
நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நாடாளு மன்ற த்தினுள் கெட்ட வார்ததையால் திட்டியமையும் ஒரு சூழ்ச்சி என நவ சமசமாஜக் கட்சி தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் செயற்படுத்தப்படுகின்ற அரசியல் சூழ்ச்சிகளில் ஒரு கட்டம் இதுவும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது நாடாளுமன்றத்தை அவமதிக்கும் ஒரு செயலாகும். மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு வழங்கும் குழு நாடாளுமன்றத்தை அவமதிக்கும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இரவு தங்கியமையும் ஒரு சூழ்ச்சி திட்டமாகும். இந்நாட்டு வரலாற்றில் நாடாளுமன்றில் பிரதமரை கெட்ட வார்த்தையில் திட்டியமை இதுவே முதல் தடவையாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.