Breaking News

பொலிஸ் மா அதிபராக ரணிலே செயற்படுகின்றார்: மஹிந்த குற்றச்சாட்டு

தமக்கு ஆதரவு வழங்குவோரைக் கைது செய்வதற்கான நடவடிக்கையொன்று முன்னெடு க்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இவ்வாறு கைது செய்யப்படுவோரை பிணையில் கூட விடுதலை செய்ய முடியாத நிலை உள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

புத்தளயில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே முன்னாள் ஜனாதிபதி இதனைக் கூறினார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது:

“நாம் கதைக்க ஆரம்பித்தால் பலவற்றைக் கூற நேரிடும். பலவற்றைக் கூற நேரிட்டால் பலர் கோபமடைவார்கள். பலர் கோபமடையும்போது என்னைச் சுற்றி இருக்கும் அனைவரும் சிறைக்குச் செல்வார்கள்.

அவர்களுக்கு பிணையும் கிடைக்காது, புதிய நிலைமை என்னவென்றால் பொலிஸ் மாஅதிபரால் ஒன்றும் செய்ய முடியாது. தற்போது முறைப்பாடுகளை செய்வதற்கு ரணில் விக்ரமசிங்கவிடமே செல்ல வேண்டும். அவரே சிரேஷ்ட பொலிஸ் மாஅதிபரைப் போன்று செயற்படுகின்றார்.