மங்களவின் குற்றச்சாட்டை நிராகரிக்கும் மகிந்த
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.
மகிந்தராஜபக்ஷவிற்கு வெளிநாடுகளில் 18 பில்லியன் டொலர்கள் சொத்துக்கள் இருப்பதாக மங்கள சமரவீர நேற்று கூறி இருந்தார்.
இது தொடர்பில் புலனாய்வு பிரிவினர் தகவல்களை திரட்டி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். எனினும் மகிந்தராஜபக்ஷ இதனை மறுத்துள்ளார். முன்னர் 5 பில்லியன் டொலர் சொத்துக்கள் இருந்ததாகவும், தற்போது 18 பில்லியன் டொலர்கள் சொத்துக்கள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. எனினும் இவற்றில் உண்மையில்லை என்று அவர் கூறியுள்ளார்.