மைத்திரிக்கு களங்கம் ஏற்படுத்திய ராஜதந்திரி தலைமறைவு
ஜனாதிபதி தேர்தல் பிரச்சார காலத்தில் மைத்திரிபால சிறிசேனவிற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலான விளம்பரமொன்றினை உருவாக் குவதில் முக்கிய பங்காற்றியவர் என கருதப்பட்ட இராஜ தந்திரி யொருவர் இலண்டனில் காணமற் போயுள்ளார்.
இலங்கையின் லண்டன் தூதரகத்தில் பணியாற்றிய சேபால ரத்தினாநாயக்க என்ற இராஜதந்திரியே காணமற்போயுள்ளார். இதனை தொடர்ந்து இவரை கண்டுபிடிப்பதற்காக சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடுவதற்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பொலிஸாரிற்கு அனுமதிவழங்கியுள்ளது.
குறிப்பிட்ட இராஜதந்திரியின் பணிகள் மார்ச் மாதம் 5 திகதியுடன் முடிவடைந்து விட்டதாகவும் இதனால் அவரை தற்போது இராஜதந்திரியாக கருத முடியாது என பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சிற்கு தகவல் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ள லண்டன் தூதரக வட்டாரங்கள், அதனால் அவர்கைது செய்யப்படலாம் எனவும் தெரிவித்துள்ளன.
ஜனாதிபதி தேர்தல் பிரச்சார காலத்தின்போது 14 சிறுமியை பயன்படுத்தி மைத்திரிபால சிறிசேனவிற்கு களங்கம் ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் பின்னணியில் இவரேயிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மகிந்தராஜபக்சவிற்கு ஆதரவாக பிரச்சார நடவடிக்கைகளை திட்டமிடுவதற்காக இவரிற்கு தூதரகம் விசேட அனுமதியை வழங்கி அனுப்பிவைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.